Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஆக்ஷனை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. ஹைகோர்ட்டில் மனு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.

வானகரத்தில் நேற்றைய தினம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் குவிந்திருந்தனர். அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர் செல்வத்தை விடாமல் சிலர் தடுக்க அதையும் மீறி பூட்டினை உடைத்து கதவை திறந்தனர். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

கல்வீச்சு தாக்குதல்

கல்வீச்சு தாக்குதல்

கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர்.

காவல்துறையினர் குவிப்பு

காவல்துறையினர் குவிப்பு

அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர் சாய் வர்த்தினி ஓபிஎஸ் தரபிப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

அப்போது ஓபிஎஸ் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர், அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கே 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன் அதிமுக அலுவலகத்துக்கு பூட்டி சீல் வைத்தனர்.

நீதிமன்றம் மூலம் நியாயம்

நீதிமன்றம் மூலம் நியாயம்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பிரதான எதிர்க்கட்சி 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். நீதிமன்றத்தின் மூலமாக நியாயத்தை பெற்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும் என்று கூறினார்.

யாருக்கு உரிமை

யாருக்கு உரிமை

அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று, பன்னீர்செல்வ்ம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றைய தினம் அதிமுக அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹைகோர்ட்டில் முறையீடு

ஹைகோர்ட்டில் முறையீடு

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார். இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+