"இலவச கேஸ் சிலிண்டர், கல்விக்கடன்" 2021 தேர்தல் அறிக்கையை பட்டி டிங்கரிங் செய்து வெளியிடும் எடப்பாடி
சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக சாமானிய மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.. அதன் செலவை அரசே ஏற்கும்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
அதேபோல் முதியோர் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.
2021 அதிமுக தேர்தல் அறிக்கை
ஏற்கனவே குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் இலவச பேருந்து உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். தற்போது மொத்தமாக 10 வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஒன்று என்பதும் தெரிய வந்துள்ளது. அதனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.
2021ல் 6 கேஸ் சிலிண்டர் அறிவிப்பு
2021ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் வீடு திட்டம், குலவிளக்கு திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் அதிமுக அதே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது.
மிஸ்ஸாகும் புதிய திட்டங்கள்
இது சாமானிய மக்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல் முதியோர் உதவித் தொகை திட்டமும் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டம்தான். அதற்கான பணத்தை மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிகரித்திருக்கிறார். இதனால் அதிமுகவிடம் புதிய திட்டங்கள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அடுத்தது என்ன?
மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதனையும் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் இல்லாததால், அது மக்களிடையே எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?












Click it and Unblock the Notifications