ரொம்ப முக்கியம்.. ரத்தத்தின் ரத்தங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! புத்தாண்டில் எடப்பாடியின் ப்ளான்!
சென்னை : புத்தாண்டை உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடிவரும் நிலையில் இந்த ஆண்டின் முதல் வாரம் அதிமுகவுக்கு மிக முக்கியமான வாரமாக கருதப்படுகிறது இதனை மனதில் வைத்து கட்சியினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2017 ஆம் ஆண்டுக்கு அடுத்தபடியாக அதிமுகவில் அதிக சிக்கல்களை சந்தித்தது 2022 ஆம் ஆண்டு அப்போதுதான் அதிமுக மூன்றாவது முறையாக பிளவுபட்டது. இதனையடுத்து பல சிக்கல்களை எடப்பாடி எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஏற்கனவே ஜெயலலிதா - ஜானகி அணி பிளவு, அதற்கடுத்தது சசிகலா - ஓபிஎஸ் பிளவு, தற்போது எடப்பாடி - ஓபிஎஸ் பிரிவு என மூன்றாவது உடைப்பை அந்தக் கட்சி சந்தித்திருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கருதுகிறது.

ஒற்றை தலைமை
காரணம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக எடப்பாடி அதிமுகவின் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என தீவிரமாக முயன்று வந்தார். அதற்கான நேரம் தற்போது கை கூடி வந்திருக்கிறது. அதிமுகவில் மிகவும் அறிந்த முகங்களாக இருந்த ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போதைய சூழலில் ஒற்றை தலைமைக்கு தகுதியாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக தங்கமணி வேலுமணி ஜெயக்குமார் சிவி சண்முகம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் அணிவகுத்திருக்கும் நிலையில் வருகின்ற நாலாம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

எடப்பாடி தீவிரம்
இதன் காரணமாக எப்படியும் இந்த முறை கட்சித் தலைமையை கைப்பற்றியே தீர வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுத்த சமாதான தூதுகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் ஆதரவு பெரும்பாலும் அவருக்கே இருக்கிறது. தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தாலும் அது எந்த அளவு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த ஆண்டுக்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளையும் தீவிர படுத்த வேண்டும் என்பதால் கட்சியின் தனி தலைமையாக இந்த ஆண்டு நிச்சயம் பதவியேற்றே தீர வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது.

சாதகமாக தீர்ப்பு
இதற்காக ஏற்கனவே சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நிச்சயம் தங்கள் தரப்புக்கு தான் தீர்ப்பு சாதகமாக வரும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கருதுகிறது. ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது இறுதி விசாரணை இல்லை என்றாலும் தங்கள் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணியை தனியே சந்தித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி இந்த மாதத்திற்குள்ளாக வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வரும்படி வாதங்களை முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்த உடனேயே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

நிர்வாகிகள் பட்டியல்
இதற்காக வாக்களிக்கும் தகுதியுள்ள நிர்வாகிகளின் பட்டியல் தயாராக இருக்கும் நிலையில் விரைவில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக அதிமுக பொது குழு வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வர இருக்கும் நிலையில் மார்ச் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என திட்டமிட்டு அதற்கேற்றார் போல் காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் தங்கள் தரப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தலுக்கான பணிகளில் கவனம் செலுத்தும் படி உத்தரவு பறந்து இருக்கிறது. ஏற்கனவே பல ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ் பக்கம் இருக்கும் நிலையில் அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதில் நீதிமன்றத்தின் இடைக்கால தடையால் சிக்கல் நீடிக்கிறது எனவே தீர்ப்பு வந்தபின் ஓபிஎஸ் பக்கம் சென்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

ஐந்தாண்டு கால கனவு
அதன் தொடர்ச்சியாக தேர்தலும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல எடப்பாடி பழனிச்சாமியின் ஐந்தாண்டு கால கனவை நிறைவேற்ற இந்த ஆண்டு சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதால் அதனை விட்டுக் கொடுக்க மனமில்லை எனவே என்ன விலை கொடுத்தாவது பொதுச்செயலாளர் பதவியை இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் கைப்பற்றியே தீர வேண்டும் என திட்டமிட்டு இருப்பதாக கூறும் சேலம் நிர்வாகிகள் அதற்காக தனது தரப்பிலிருந்து மூன்று முன்னாள் அமைச்சர்களையும் களமிறக்கி இருப்பதாகவும் தேர்தலுக்கு முன்னதாகவே மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு












Click it and Unblock the Notifications