Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கட்சிகள் இணைந்துள்ள பெரிய கூட்டணி என்பதால் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை முடித்து இன்றுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தலை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு ஆரம்பத்தில் 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.
பின்னர் சில பேச்சுவார்த்தைகளில் 10 தொகுதிகள் வரை வழங்கும் முன்மொழிவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அக்கட்சியின் பொருளாளர் எல்கே சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது கூட்டணி கட்சிகளின் கண்ணை உறுத்தியுள்ளது.

திமுக கூட்டணி
தேமுதிக தவிர்த்து ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. அவற்றில் காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் 28 தொகுதி
மொத்தமாக சுமார் 26 கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக சார்பில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
இதற்கிடையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து கூட்டணிக்குள் சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கோரியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனியர் குழு
அதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் திமுக தலைமையகம் அதிருப்தி அடைந்து, கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மூத்த பேச்சுவார்த்தை நடத்தும் சீனியர் குழுவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி சமரசம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள்
அந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 6 தொகுதிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளுக்கும் சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுக்கு தலா 4 தொகுதிகள் வழங்க திமுக தலைமையகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிமுக
ஆனால் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் அந்தக் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதி எண்ணிக்கை மாற்றமடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக தானாகவே போட்டியிடும் தொகுதிகள் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. திமுக 160 தொகுதிகளுக்கு குறையாமல் நேரடியாக போட்டியிடவும், கூட்டணி கட்சிகள் உட்பட உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகள் வரை களமிறங்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் தேர்தல் திட்டம்
எனவே கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடித்து இன்றுக்குள் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய திமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் கூட்டணி பங்கீடு முடிவு செய்யப்பட்டால் தமிழக தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை இறுதி செய்த கட்சியாக திமுக முன்னணியில் நிற்கும். எதிர்முகாமான அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கவேயில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
-
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications