சென்னையில் சசிகலா வீடு முன்பு திடீரென குவிந்த அதிமுக தொண்டர்கள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்!
சென்னை: சென்னையில் சசிகலா வீடு முன்பாக இன்று குவிந்த அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன் சசிகலாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகளாகப் பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராவதில் ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) முனைப்பாக உள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் ஈபிஎஸ்-ன் ஒற்றை தலைமையை வலியுறுத்தியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஜூலை 11-ல் நடைபெறும் புதிய அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஈபிஎஸ் கோஷ்டியின் இந்த அமளிதுமளிக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் இருந்து ஆதரவாளர்களுடன் நேற்று வெளியேறினார். இன்று டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் கோஷ்டி, ஜூலை 11-ல் நடைபெறும அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா வீடு முன்பாக திடீரென அதிமுக தொண்டர்கள் திரண்டனர். கைகளில் அண்ணா திமுக கொடியை பிடித்தபடி, ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும் அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Recommended Video
அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக தொண்டர்கள் சசிகலா வீடு முன்பாக குவிந்து முழக்கமிட்டது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications