10 ஆண்டு மர்மம்.. ராமஜெயத்தை கொன்றது யார்? பரபர திரில்லர் - நாளை 12 ரவுடிகளிடம் உண்மை அறியும் சோதனை
சென்னை: தமிழ்நாடு அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விசாரணை சூடுபிடித்து இருக்கும் நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் 12 ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் இளைய சகோதர் தொழிலதிபர் கே.என். ராமஜெயம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி காலை இவர் திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் திருச்சி - கல்லணை சாலையில் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்படாத கொலையாளிகள்?
இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தமிழ்நாடு போலீசாரே மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த கொலை வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

தீவிர விசாரணை
இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக ராமஜெயத்தை கொன்ற கொலையாளி யார், அவர் கொல்லப்பட்டதற்கான நோக்கம் என்ன என்ற எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராமஜெயம் கொலை வழக்கை தீவிரமாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளார்கள்.

12 ரவுடிகள்
இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தினேஷ், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 ரவுடிகளை சந்தேகப் பட்டியலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் சிலரிடம் கடந்த சில மாதங்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் 12 ரவுடிகளுக்கும் இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் நாளை 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நாளை உண்மை கண்டறியும் சோதனை
சென்னையில் நாளை முதல் 21 ஆம் தேதி வரை 12 ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் டெல்லிக்கு சென்று உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கான தேதியை கேட்டுப் பெற்று வந்து உள்ளனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications