செந்தில் பாலாஜி "ரூட்டை" பிடிக்கும் ராஜேந்திர பாலாஜி.. கையில் எடுத்த அஸ்திரம்- போலீஸ் என்ன செய்யும்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒன்றை கோர்டில் எடுத்துக்காட்டாக கூறி தனக்கு எதிரான வழக்கில் இருந்து தப்பிக்கும் முடிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை அமைத்து தேடி வருகிறது தமிழக காவல்துறை.
பத்து நாட்களாகியும் அவரது இருப்பிடத்தைக்கூட அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

என்ன வழக்கு
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறைவாகி உள்ளார்.

விசாரணை
இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கார் டிரைவர் ராஜ்குமார், ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன்களான ரமணா, ஆகியோரையும் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியை 4 மாநிலங்களில் மிக தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள். ராஜேந்திரபாலாஜியை இண்டர்நேசனல் வாண்டேட் ரேஞ்சில் லுக் அவுட் நோட்டீஸெல்லாம் கொடுத்து பார்த்தாச்சு. ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை.

வேகமாக விசாரிக்க வேண்டும்
இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து உள்ளார். இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து கைதில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கையை ராஜேந்திர பாலாஜி எடுப்பார் என்று தகவல்கள் வருகின்றன. இதே போன்று அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி செய்ததான ஒரு குற்றச்சாட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இருந்தது.

செந்தில் பாலாஜி
இதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டது. அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி 33 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 2.8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையும் கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தது.

என்ன சொன்னார்
சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி இவருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் இதில் வாங்கிய பணத்தை செட்டில் செய்து விட்டேன் என்கிற காரணத்தை கோர்ட்டில் சொல்லி அந்த வழக்கிலிருந்து தப்பித்தார் செந்தில் பாலாஜி. இதே ரூட்டை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video

அதே ரூட்
செந்தில் பாலாஜி போலவே தனக்கு எதிரான மோசடி வழக்கின் புகார்தாரர்களுக்கு வாங்கிய பணத்தை செட்டில் பண்ணிவிட்டால் தப்பித்து விடலாம் என ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனராம். செந்தில் பாலாஜி வழக்கை கோர்டில் எடுத்துக்காட்டாக கூறி வழக்கில் இருந்து தப்பிக்கும் முடிவில் ராஜேந்திர பாலாஜி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications