Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாஜக தலைவராக சீமானா?.. வரவேற்பது போல் வேட்டு வைத்த காயத்ரி ரகுராம் ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவராகவும் முதல்வராகவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் நான் முடியாது என சொல்லிவிட்டேன் என ஒரு ஊடகத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியை நேர்மறையாக பேசுவதுபோல் கிண்டல் செய்து பாஜகவின் காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்று மக்கள் போற்றும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

எந்த ஒரு தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியே நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என தொடர்ந்து முயற்சிக்கும் அக்கட்சியின் தன்னம்பிக்கை அனைவராலும் பாராட்டப்படுகிறது.

தனியார் ஊடகம்

தனியார் ஊடகம்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தனியார் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் என்னை தமிழக பாஜக தலைவராக்கவும் முதல்வராக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நான் முடியாது என கூறிவிட்டேன் என கூறியிருந்த சீமான் அந்த பேட்டி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார்.

ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீன்ஷாட்

இந்த பேட்டியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து போட்டுள்ள பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் சீமானை ஆதரிப்பது போல் ஆதரித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ட்வீட் போட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக பாஜக தலைவராக்கவும் முதல்வராக்கவும் முயற்சித்தார்களே ஏன் வேண்டாம் என சொல்லிவிட்டீர்கள்?

வரவேற்பு

வரவேற்பு

நீங்கள் வந்திருந்தால் நாங்கள் உங்களை இரு கரங்களை கூப்பி வரவேற்றிருப்போமே! என பாராட்டுவது போல் பாராட்டி சீமானை கிண்டல் செய்துள்ளார் காயத்ரி. இன்னும் இரு ஆண்டுகளில் அந்த பேட்டியில் சொன்னது போல் நடந்து விடும் என ஒரு வலைஞர் தெரிவித்துள்ளார். ஐய்யய்யோ அப்ப பாஜக முதல்வர் வேட்பாளராக்க முயற்சினு திருமாவளவனும் கூறியுள்ளாரே என்கிறார் இன்னொரு வலைஞர்.

எல்லை

எல்லை

எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு வரம்பு மீறுவதே வழக்கமாக கொண்டுள்ள நீங்கள் எதையும் எதையும் சாதிக்க முடியாது...

காயத்ரி எப்படி

காயத்ரி எப்படி

அத்தைக்கு மீசை முளைத்தால் இது நடக்கும் என்கிறார் ஒரு வலைஞர். சமூகவலைதளங்களிலும் அறிக்கை மூலமும் மத்திய அரசை விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து வருபவர் காயத்ரி. அவர் எப்படி பாசிட்டிவாக ட்வீட் போடுவார். நீங்கள் அப்படியே வந்துட்டா நாங்கள் இரு கரங்களையும் கூப்பி அப்படியே ஏற்றுப்போம் பாருங்க என்பதை சொல்லாமல் சொல்லி ட்வீட் போட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+