தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்?
சென்னை: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்காமாகவே இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க டாலர் மதிப்பு சற்றே குறைந்தது தங்கத்திற்கு ஆதரவாக இருந்தாலும், மறுபுறம் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொருளாதார வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையில் தான் இருக்கும் என்கின்றனர்.
சாதாரணமாக போர் பதற்றம், பொருளாதார அசாதாரண நிலை போன்ற சூழல்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் அதன் விலை உயரும். ஆனால், தற்போது அப்படி இல்லாமல் திடீரென சரிவது, சில நாட்களுக்குப் பின் லேசாக உயர்வது எனவே இருக்கிறது.
இந்நிலையில், இன்றைய சர்வதேச வர்த்தகத்தில் தங்கம் விலை மிகச்சிறிய அளவில் மட்டுமே குறைந்துள்ளது. சில நேரங்களில் விலை 1 சதவீதம் வரை சரிந்தாலும், பின்னர் மீண்டும் சற்று உயர்ந்தது. இந்த நிலைமை காரணமாக தங்கத்தின் விலையில் நிலைத்தன்மை இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர்
இதனால் தங்க முதலீட்டாளர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அமெரிக்க டாலர் மதிப்பு சற்றே குறைந்துள்ளது. பொதுவாக டாலர் மதிப்பு குறையும் போது, பிற நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது சற்று எளிதாக இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும். அதே நேரத்தில் தற்போதைய சூழல் காரணமாக தங்கத்துக்கான சாதகமான சூழல் முழுமையாக உருவாகவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றன.
தங்கத்தின் விலை
மேலும், தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாக எண்ணெய் விலை உயர்வும் பார்க்கப்படுகிறது. மேற்காசிய பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஈரான் மீதான் தாக்குதல்களுக்குப் பின்னர் ஒரு பேரல் எண்ணெய் விலை 115 டாலரை தாண்டியது. இந்த மாதம் மட்டும் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
பணவீக்கம்
இது உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்தால், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு குறைந்து விடும். குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. முன்பு இந்த ஆண்டில் இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எதிர்பார்ப்பு மங்கியுள்ளது.
வட்டி வருமானம் தராத முதலீடு
வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சூழலில் தங்கம் மீது முதலீடு குறைவது வழக்கமான ஒன்று. காரணம், தங்கம் வட்டி வருமானம் தராத முதலீடாக இருப்பதால், அதிக வட்டி தரும் முதலீடுகளுக்கு மக்கள் மாறிவிடுவார்கள். இதுவே தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் தடுக்கிறது. கடந்த சில வாரங்களில் தங்கம் விலை கணிசமாக சரிந்துள்ளது. குறிப்பாக இந்த மாதம் மட்டும் தங்கம் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெரிய சரிவாக கருதப்படுகிறது.
வெள்ளி, பிளாட்டினம்
மேற்காசிய பகுதியில் போர் தொடங்கிய பிறகு அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் மாற்றத்துடன் காணப்படுகிறது. வெள்ளி, பிளாட்டினம், பாலாடியம் போன்ற உலோகங்களின் விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தமாக உலோக சந்தையில் நிலைத்தன்மை இல்லாத சூழல் தொடர்கிறது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
தங்கம்.. 17 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி! ஏப்ரலில் நடக்க போகும் அடுத்த அபாயம்.. போச்சு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?














Click it and Unblock the Notifications