ஓரக்கண்ணால் அன்பில் மகேஷை பார்த்த உதயநிதி.. "அந்த பார்வை".. டக்கென திரும்பி பார்த்த சபையினர்
அன்பில் மகேஷ் பேச்சை உதயநிதி ஸ்டாலின் ரசித்து கேட்டார்
சென்னை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் எம்எல்ஏ உதயநிதியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. திமுகவினர் இதை விடாமல் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
அன்பில் மகேஷ் குடும்பம் தமிழகம் அறிந்த ஒன்றுதான். மறைந்த கருணாநிதியின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம்.
இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய நண்பர். அவரது மகனான அன்பில் மகேஷ் உதயநிதியின் நண்பர். ஆக மொத்தம் இது வாழையடி வாழையாக நட்பில் தொடரும் குடும்ப உறவு ஆகும்.

கருணாநிதி
உதயநிதியின் தாத்தா கருணாநிதி முதல்வராக இருந்தபோது. அவருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் அன்பில் மகேஷ் தாத்தா அன்பில் தர்மலிங்கம். தற்போது 3வது தலைமுறையாக உதயநிதியும் அன்பில் மகேஷூம் திமுக பாரம்பரிய குடும்ப நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள்... ஆரம்பத்தில் உதயநிதி ஸ்டாலினின் அகில இந்திய ரசிகர் மன்றத்தை கவனித்து கொள்ளும் அளவுக்கு நெருங்கியே இருந்தார் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ்
கொஞ்ச நாளிலேயே திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராக முன்னேறினார் உதயநிதி. அப்போதே கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்தவராக மகேஷ் வலுப்பெறுவார் என்று பேசப்பட்டது. உதயநிதி இளைஞரணி செயலராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே பக்க பலமாக இருந்து வருவதும் அன்பில் மகேஷ்தான்... அதற்கான முக்கிய அசைன்மென்ட்டை உதயநிதி வழங்கியதையடுத்து, இளைஞர் அணியும் புது ரத்தம் பாய்ந்து பொலிவுடன் திகழ காரணமாக இருந்தது அன்பில் மகேஷ்தான்.. உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று ஓபனாகவே கோரிக்கை விடுக்கும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் இப்போது வரை தொடர்கிறது.

அன்பில் மகேஷ்
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றபோது, பதவியேற்புக்கு முன்புகூட, உதயநிதியை கட்டியணைத்து அன்பு பாராட்டிவிட்டுதான், அன்பில் மகேஷ் பதவியேற்றுக் கொண்டார்.. இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிகல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது... அப்போது, 34 புதிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுப் பேசினார்.

அன்பில் மகேஷ்
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றபோது, பதவியேற்புக்கு முன்புகூட, உதயநிதியை கட்டியணைத்து அன்பு பாராட்டிவிட்டுதான், அன்பில் மகேஷ் பதவியேற்றுக் கொண்டார்.. இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிகல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது... அப்போது, 34 புதிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுப் பேசினார்.

ஓரக்கண்ணால் பார்வை
அப்போது, அன்பில் மகேஷ் பின்பக்கம் உட்கார்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பதிலுரை மற்றும் புதிய அறிவிப்பை வாசிக்கும்போது அதை பார்த்து ரசித்து கொண்டே இருந்தார்.. அன்பில் மகேஷை உதயநிதி ரசித்து பார்ப்பதை அங்கிருந்த பலரும் கவனித்ததுடன், அந்த நட்பின் ஆழமும் அனைவராலும் ஈர்க்கப்பட்டது..

வைரல் போட்டோ
இப்படித்தான் கடந்த 2016ம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அன்பில் மகேஷ், தன்னுடைய கன்னிப்பேச்சில் உரையாற்றும்போது, அப்போதும் உதயநிதி ஸ்டாலின் அதை ரசித்து பார்த்தார்.. அந்த நேரம் உதயநிதி எம்எல்ஏ கிடையாது என்பதால், சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தவாறு அதை கண்டு ரசித்தார்... இப்போது அன்பிலுக்கு அருகில் இருந்தவாறே ரசித்துள்ளார்.. இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications