இதயத்தில் ஓட்டை.. உயிருக்கு போராடும் 12 வயது சிறுமி! காப்பாற்ற உடனே உதவுங்கள்
சென்னை: குழந்தைகள் நாட்டின் எதிர்கால செல்வங்கள். அந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்த வகையில், கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடும் 12 வயது சிறுமி, ரத்னாவை காப்பாற்ற உதவுங்கள். உங்களின் சிறு உதவி கூட, உயிர் காக்கும் போராட்டத்தில் பெரிய பங்களிப்பாக இருக்கும்.
சென்னையைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி ரத்னா பூவழகி. இந்த சிறுமி விளையாட்டு மைதானங்களை விட மருத்துவமனைகளிலேயே அதிக நாட்களைக் கழித்துள்ளார். ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே இவருக்கு இதய நோய் தொடங்கிவிட்டது. பெரும்பாலான குழந்தைகள் 6 மாதங்களில் தவழ்ந்து, அமர்ந்து, விளையாடும். ஆனால் இந்த வயதில், ரத்னா மருத்துவமனையில்தான் தனது நாட்களை கழித்திருக்கிறார்.

வேண்டாத சாமியில்லை, இருப்பினும் ரத்னாவின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 6 மாதம் முதல் ரத்னா அரசு மருத்துவமனையில் தவறாமல் தனது சிகிச்சையைத் தொடர்கிறார். அவரது தந்தை, கணேசன் ஆடைத் துறையில் சலவை வேலை செய்து வருகிறார். அவருக்கு வார சம்பளம் ரூ.3,500 மட்டுமே. இந்த சொற்ப வருமானத்தில், அவர் தனது குடும்பத்தையும் பராமரித்து, ரத்னாவின் மருந்து செலவுகளையும் ஈடுகட்டுகிறார். தற்போது ரத்னாவின் உடல்நிலை மோசமடைந்திருப்பதால், அதற்கான மருத்துவ செலவுகளுக்கு கணேசன் கடுமையாக உழைத்து வருகிறார்.
ரத்னாவுக்கு 6 வயதாக இருந்தபோது, MIOT மருத்துவமனை நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாமில் அவரது ரத்னாவுக்கு இதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில், மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தெரிவித்தனர். அதாவது ரத்னாவுக்கு இரட்டை அறைகள் கொண்ட வலது வென்ட்ரிக்கிள் மற்றும் இதயத்தில் ஒரு சிறிய துளை உள்ளது என்பதை கண்டுபிடித்து தெரிவித்தனர்.
இது உயிரை கொல்லும் பிரச்சனை. இதிலிருந்து ரத்னாவை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3,65,000 செலவாகும். வாராந்திர வருமானத்தில் வாழும் ஒரு குடும்பத்திற்கு, இது மிகப்பெரிய தொகை. தனது மகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுக்க கனவு காணும் அவரது தந்தை, தற்போது உதவியற்ற நிலையில் உள்ளார். ஏதாவது அதிசயம் நடக்காதா? என் மகள் காப்பாற்றபட மாட்டாளா? மற்ற சிறுமிகளை போல ஓடியாடி விளையாட மாட்டாள? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ரத்னா பள்ளிக்குச் செல்ல விரும்பும் ஒரு புத்திசாலி சிறுமி. களைப்பு அல்லது மூச்சுத்திணறல் இல்லாமல் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவளது கனவு. மற்ற சிறுமிகளை போல நான் எப்போது மாறுவேன் என்று அவளது தாயிடம் கேட்கிறாள். தாயின் கண்ணீர்தான் பதிலாக இருக்கிறது. ஆனால் பெற்றோர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று.
ஆம் அந்த அதிசயம், என்னை போல, உங்களை போல கருணை கொண்டவர்களால்தான் நடக்கும். நாம் நினைத்தால் அந்த சிறுமியை காப்பாற்றலாம். சிறுமி வாழ்வதற்கு இரண்டாவது வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம். நம்மால் முடிந்த உதவியை செய்வோம். எல்லாவற்றையும் நொடியில் மாற்றிவிட நாம் கடவுள் இல்லை. ஆனால் கருணை கொண்ட சக மனிதர்கள். நம்மால் நிச்சயம் சிறுமியை காப்பாற்ற முடியும். முடிந்த உதவியை செய்வோம். அதிசயத்தை நாம் நடத்தி காட்டுவோம்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications