இந்தி படித்தால்.. தமிழ் அழியாது.. திமுகதான் அழியும்! ட்விட்டரில் பாஜக பேசிய “புது லாஜிக்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்தி படித்தால் திமுகதான் அழியும் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது.

இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்டாலின் அறிக்கை

ஸ்டாலின் அறிக்கை

இதனை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

தாய்மொழி உணர்வு

தாய்மொழி உணர்வு

வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

உரச வேண்டாம்

உரச வேண்டாம்


எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

 திமுக போராட்டம்

திமுக போராட்டம்


இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

பாஜக ட்வீட்

பாஜக ட்வீட்

ஆனால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களோ இந்தி கற்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தி படித்தால் தமிழ் அழியாது என்றும் திமுகதான் அழியும் எனவும் தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+