அதெல்லாம் பார்க்க முடியாது.. தூதுவரை வைத்து "லாபி" செய்த சசிகலா? கட் அண்ட் ரைட்டாக மறுத்த டெல்லி?
சென்னை: டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்களை சந்திக்க சசிகலா தரப்பு தீவிரமாக முயன்று வருவதாக அவருக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளன. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழுவை முறையற்றது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடுத்துள்ளது.
இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் எழுதி உள்ளது. இதை ஓ பன்னீர்செல்வம் எதிர்த்து தனியாக கடிதம் எழுதி உள்ளது.

சசிகலா
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சசிகலா தனது அரசியல் மூவ்களை செய்து வருகிறார். சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் இணைவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா தனது அரசியல் ஆலோசகராக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முக்குலத்தோர் வாக்கு சதவிகிதம், முக்குலத்தோர் தலைவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

டெல்லி
சசிகலாவின் இந்த ஒவ்வொரு மூவிற்கும் பின் இன்னொரு முக்கிய புள்ளி இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி - சென்னையில் செல்வாக்கோடு இருக்கும் அந்த புள்ளிதான் சசிகலாவிற்கு இந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். அரசியல் விவகாரங்களில் "பஞ்சாயத்து" பேசும் அந்த புள்ளி முன்பு சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தவர். இப்போது அதே புள்ளி எடப்பாடியின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக சசிகலாவுடன் கை கோர்த்து உள்ளதாகவும், தினமும் அவரை வழி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முயற்சி
இந்த "பஞ்சாயத்து" நபர் மூலம் டெல்லி பாஜகவிடம் பேச சசிகலா முயன்றதாக கூறப்படுகிறது. டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைகளை மறைமுகமாவது சந்தித்து பேச சசிகலா முயன்று இருக்கிறாராம். டெல்லி பிரஷர் கொடுத்தால் அதிமுகவில் ஐக்கியம் ஆகலாம் என்று நம்பி சசிகலா இப்படி முயற்சி எடுத்துள்ளார். பிரதமர் மோடியை கண்டிப்பாக சசிகலா தனியாக சந்திக்க முடியாது. எடப்பாடியையே மோடி தனியாக சந்திக்க மறுத்துவிட்டார். அப்படி இருக்கும் போது சிறை தண்டனை பெற்ற சசிகலாவை அவர் சந்திக்க வாய்ப்பு இல்லை. இதனால் சசிகால அட்லீஸ்ட் டெல்லியில் உள்ள பாஜகவின் முக்கிய தலைகளை மறைமுகமாவது சந்தித்து பேச முயன்று இருக்கிறாராம்.

முடியவில்லை
ஆனால் தூது போன அந்த நபரிடம் டெல்லி பாஜக தரப்போ.. சசிகலாவை தனியாக எல்லாம் சந்திக்க முடியாது. வேண்டுமென்றால் போனில் பேசலாம். ஆனால் நேரில் சந்திக்க முடியாது என்று கை விரித்ததாக கூறப்படுகிறது. தூது போன நபரிடம்.. அவருக்காக நீங்கள் வேண்டுமானால் வந்து பேசுங்கள். ஆனால் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது என்று பாஜக கட் அண்ட் ரைட்டாக கூறியதாக தெரிகிறது.

தலையிட விரும்பவில்லை
சசிகலாவை நேரடியாக சந்தித்து பேச பாஜகவின் டாப் தலைகள் யாரும் தயாராக இல்லை என்றே கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனக்கு முக்குலத்தோர் ஆதரவு இருப்பதால் பாஜக தலைகள் தன்னை சந்திப்பார்கள் என்று சசிகலா நம்பி இந்த முயற்சியை எடுத்ததாக தெரிகிறது. ஆனால் சசிகலாவிற்கு தேவையான "உதவிகளை" மறைமுகமாக செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நேரடியாக அவரை சந்திக்க விரும்பவில்லை என்று டெல்லி தலைமை "ஸ்டான்ட்" எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications