கரூரில் ஷூட்டிங் நடந்தது உண்மைதானா? ஜனநாயகன் படத்தின் தளபதி கச்சேரி பாடலில் இடம்பெற்ற அந்த காட்சி!
சென்னை: ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடலில், விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்து மக்கள் முன் பிரச்சாரம் செய்வதை போன்ற சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்த போது ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கும் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நக்கீரன் கோபால், கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு பின் விஜய் தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இந்தப் படத்தின் விஜய் போலீஸ் அதிகாரியாக இருந்து, பின் அரசியல்வாதியாக மாறும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன் ரிலீஸாக உள்ளதால், விஜய்யின் அரசியலுக்கு பெரிய மைலேஜாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில் விஜய், அனிருத் மற்றும் அறிவு ஆகிய மூவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
இந்தப் பாடலில் விஜய்யின் அரசியல் வரவை முன் வைக்கும் வகையில் சில வரிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் விஜய் மக்கள் முன்பாக பிரச்சார வாகனத்தில் இருந்து பிரச்சாரம் செய்வது போல் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் முதல் படம் முதல் GOAT வரையிலான டைட்டில் மற்றும் போஸ்டர் முன்னிலையில் இருக்க, பின்னணியில் பிரச்சார காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது தவெக தரப்பில் எஸ்ஐடி விசாரணைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், கரூரில் அனுமதியின்றி ஜனநாயகன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
கரூர் பிரச்சாரத்தின் போது அதிநவீன ட்ரோன் கேமரா இருந்ததாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலிலேயே விஜய்யின் பிரச்சார காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் கரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய்யின் ஷூட்டிங் நடந்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
-
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications