Patta: பட்டா மாற்ற அப்ளிகேஷன் கொடுத்த சின்னத்துரை! வாய் கூசாமல் ரூ 10000 கேட்ட விஏஓ! கரூரில் கைது
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ 10 ஆயிரம் லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை. இவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரிடம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் என்பவர் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்துரை கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவக்குமாரிடம் விவசாயி சின்னத்துரை வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீஸார் விஏஓ சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் பட்டா மாற்றுவது எப்படி?
தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்த பின்னர், ஆன்லைனிலேயே நீங்கள் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் ஆபிஸுக்கு போய் அலைய தேவையில்லை.. விஏஓ , நில அளவையர் உள்பட யாருக்கும் லஞ்சமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் என்ன... கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய நிலை வரும். சரியான முறையில் ஆவணங்களை சமர்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும். பட்டா பெயர் மாற்றம் செய்ய முதல் வழி: தமிழ் நிலம் வெப்சைட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.. பட்டா மாறுதல் கோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள்ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என இரண்டு முறையில் பட்டா பெயர் மாற்ற வேண்டும்.
உட்பிரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்பிரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதில் ஊர், நிலம் , பத்திரப்பதிவு எண் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.. தொடர்ந்து பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
பட்டாவிற்கு விண்ணப்பிக்க 1 கிரையப் பத்திரம் 2. செட்டில்மென்ட் பத்திரம் 3. பாகப்பிரிவினை பத்திரம் 4. தானப் பத்திரம் 5. பரிவர்தனை பத்திரம் 6.அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய ஆறு பத்திரங்களில் எந்த பத்திரம் உங்களிடம் உள்ளதோ அந்த பத்திரத்தின் நகலை எடுத்து வையுங்கள். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையாள அட்டை , முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் (ஆறு பத்திரத்தில் எது உள்ளதோ அந்த பத்திரம்) போன்றவை போதும். ஆனால் பின்னர் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) கண்டிப்பாக அந்த ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications