இபிஎஸ் ஒரு காட்டுமிராண்டி! கொடநாடு கொலை வழக்கில் கச்சேரி இருக்குது! கொதிக்கும் கோவை செல்வராஜ்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு காட்டுமிராண்டி என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
Recommended Video
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளி கூண்டில் நிற்கக் கூடாது என்பதற்காக கட்சியை அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என சாடியிருக்கிறார்.
பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்னும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் எனக் கூறி புதிய புயலை கிளப்பியுள்ளார் கோவை செல்வராஜ்.

கோவை செல்வராஜ்
அதிமுக செய்தித் தொடர்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமியை பற்றி கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். அதில் தர்மத்தை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் அவர் துரோகி என்பதை அடையாளம் கண்டதால் தான் அவரிடம் முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா ஒரு முறை கூட வழங்கவில்லை எனவும் கோவை செல்வராஜ் ஆவேசம் காட்டினார்.

ஜம்பம் பலிக்காது
மேலும், பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்னும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்றும் முழு மனமில்லாமல் நிர்பந்தம் காரணமாக அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எடப்பாடி பழனிசாமியின் ஜம்பம் பலிக்காது எனக் கூறிய கோவை செல்வராஜ், அதிமுகவை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வத்தை விட்டால் வேறு ஆளில்லை எனக் கூறினார்.

பணம் -பதவி
பணமும் பதவியும் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியம் என்றும் பதவிக்காக யாரையும் கொலை செய்யக்கூட அவர் தயங்கமாட்டார் எனவும் கோவை செல்வராஜ் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் ஆனால் எந்த காயமும் படாமல் பேண்டேஜ்களை ஒட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாடகம் ஆடி வருவதாகவும் கூறினார்.

கூத்தாட்டம்
ஒன்றரை கோடி தொண்டர்களால் புனிதமான இடமாக கருதப்படும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் குடிகாரர்களை வைத்துக்கொண்டு கும்மாளமும், கூத்தாட்டமும் போட்டதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறிவார்கள் என கோவை செல்வராஜ் கொந்தளித்தார்.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications