என்னை வாழ்த்தி அனுப்புங்க.. திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் சூசகம்?
சென்னை : திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சியில் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், கேஎஸ் ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், திமுக மூத்த நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்.. எனத் தொடங்கும் தாகூரின் கவிதை வரிகளைப் பதிவிட்டுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். அவரது அந்தப் பதிவில் "மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே முகத்தை இணைத்தது போல் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ட்வீட்
அவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், திமுக தரப்புகளில் இருந்து கடுமையான எதிர்வினைகள் வந்ததால், அப்பதிவுகளை நீக்கிவிட்டார். திமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் இந்தக் கருத்து, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

அதிரடி நடவடிக்கை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலகல்? - சூசகம்
இந்நிலையில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவில் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், சூசகமாக ஒரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

என்னை வாழ்த்தி அனுப்புங்கள்
ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள சில வரிகளைப் பதிவிட்டுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அதில், "நண்பர்களே, நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள். வானத்தின் வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது. எனது பாதையும் அழகைப் பொழிகிறது. நான் என்னுடன் என்ன கொண்டு போகிறேன் என்று கேட்காதீர்கள். வெறுங்கையுடன், ஆர்வ இதயத்துடன் என் யாத்திரை ஆரம்பமாகிறது. நான் எனது திருமணமாலையை அணிந்து கொள்கிறேன்.எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று.

என் மனதில் பயம் இல்லை
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் என் மனதில் எவ்விதப் பயமும் இல்லை. எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப்பார்க்கும். அரசனின் அரண்மனையில் இருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும். நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தினாலேயே மரணத்தை நேசிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்தகட்ட திட்டம்?
இதனால், திமுகவில் சஸ்பெண்ட் நடவடிக்கையை அடுத்து, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் இருந்து வரும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications