சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எகிறிய எம்எஸ்வி.. படாரென கதவு திறந்த கண்ணதாசன்.. "சொன்னது நீதானா".. காலத்தை வென்ற இரு காவியங்கள்!

கண்ணதாசனுக்கும், எம்எஸ்விக்கும் இன்று பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: கவிக்கும் இசைக்கும் இன்று பிறந்த நாள்.. மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் இன்று பிறந்தநாள்.

எம்எஸ்வி புகழின் உச்சியில் இருந்த நேரம் அது.. ரொம்ப பிஸியான நேரம்.. கைவசம் நிறைய படங்கள் இருந்தது.

ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி ரூம் கொடுக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர் செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர்

 பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்... கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுமாம்... இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை.. ஆனால் மறுநாள் காலையிலும் கண்ணதாசன் எழவில்லை.. தூங்கிக் கொண்டேயிருந்திருக்கிறார்.

கண்ணதாசன்

கண்ணதாசன்

இதனால் எம்எஸ்வி டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் ரூம் கதவு முன்பு போய் நின்று கொண்டு, "யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்" என்று அங்கிருந்து சத்தம் போட்டிருக்கிறார். டக்கென்று கண்ணதாசனின் ரூம் கதவு திறந்தது... எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள்.

 படபடப்பு

படபடப்பு

எம்எஸ்வி பேசியது எப்படியோ கவிஞருக்கு கேட்டிருக்குமோ என்று படபடப்பு எகிறி விட்டது. கவிஞர் வெளியே வந்தார்.. எம்எஸ்வியிடம்... "சொன்னது நீதானா"... என்றார். எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். "ஐயோ.. நான் இல்ல... அது வந்து.." என்று திணறினார்.

 பிறப்பு

பிறப்பு

ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியையே உற்றுப்பார்த்துகொண்டு, "இல்லை... சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே" இந்த வரிகளை போய் கம்போஸ் செய், இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு போனாராம்.... இப்படித்தான் அந்த பாடல் பிறந்திருக்கிறது.. பல பாடல்களும் இப்படியே தான் யதார்த்தமாய் பிரசவித்திருக்கின்றன..!

 கருவிகள்

கருவிகள்

அன்றைய ஆரம்ப காலத்தில், எதுவுமே புரியாமல் "அண்ணாந்து" பார்த்து கொண்டிருந்த இசையை, எளிமையாக்கி, அதை சாமான்ய மக்களுக்கு நெருக்கமாக்கியவர்கள் விஸ்வநாதனும் - ராமமூர்த்தியும் தான்..! இதில் எம்எஸ்வி தனித்திறனுடன் ஜொலித்தார்.. கருவிகளை குறைவாக வைத்துக்கொண்டு, 'ஓடம் நதியினிலே' என்று கிறங்கடிப்பார்.. ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, "ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்" என்றும் மிரட்டுவார்.

 சினேகம்

சினேகம்

அதிலும் கண்ணதாசன் என்றால் அவ்ளோ பிரியமாம்.. கவிஞரை கொஞ்சி கொண்டே இருப்பாராம் எம்எஸ்வி... கண்ணதாசனோ, எம்எஸ்வியை கெஞ்சியடியே மிஞ்சுவாராம்.. அப்படி ஒரு ஸ்நேகம் இருவருக்குள்ளும் இழையோடி வந்துள்ளது..ஆர்மோனிய பெட்டி முன் உட்கார்ந்து இவர் ஸ்வரம் போட... எதிரே பேனா பிடித்து உட்கார்ந்து அலங்காரமற்ற வார்த்தைகளை கவிஞர் போட, அங்கு பிறந்த ஆயிரமாயிரம் பாடல்களுக்குதான் ஏது ஈடு? ஏது இணை?

 30 நிமிஷம்

30 நிமிஷம்

மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்லவும், அதை கண்ணதாசன் மாற்றவும், அதை உதவியாளர் திருத்தவும் எல்லாமே வெறும் 30 நிமிஷத்துல முடிந்துவிடுமாம்.. ஒருமுறை அதை சரிபார்த்துவிட்டு, "வரட்டுமா விசு" என்றபடியே கிளம்பி போய்விடுவாராம் கண்ணதாசன்..!

 உறவுகள்

உறவுகள்

மனித வாழ்க்கையின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், வார்த்தைகளில் உறவு பிணைப்பினை ஜனநாயக ரீதியாக சொல்லவும், இன்னொரு எம்எஸ்வியும் கவிஞரும் நமக்கு இனி கிடைத்து விடப்போவதில்லை.. கவிஞரே.. தயவுசெய்து ரெண்டு பேரும் திரும்ப வந்துடுங்க... உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம்..!!

English summary
Legends Kannadasan and MSV Birthday today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X