Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாகவி நாள்.. இந்திய விடுதலை போராட்டத்தில் "முண்டாசு கவி" இட்ட தீ.. பாரதியார் நினைவு தினம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவுக்கான விடுதலை என்பது பள்ளி பாட புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதை போல ஒன்றிரண்டு தலைவர்களால் கிடைத்துவிட்டதல்ல.

விடுதலை என்கிற கோரிக்கையை நோக்கி இந்த தலைவர்களை உந்தி தள்ளவே பல போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது. அந்த வகையில் சுதந்திர இந்தியாவுக்காக தென்னிந்தியாவிலிருந்து பலர் தங்கள் உயிரையும் கொடுத்தனர்.

இப்படியான தியாகங்களை விடுதலை போராட்ட உணர்வாக மாற்றி மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்றவர்களும் நாட்டின் விடுதலைக்கு போராடியவர்களில் முக்கியமானவர்களாவார்கள்.

முன்னணியில் பாரதி

முன்னணியில் பாரதி

அந்த முக்கியமானவர்களில் பாரதி எப்போதும் முன்னணியில் இருக்கிறார். பாரதியின் பாடல்கள் மீதும், அவரின் கவிதைகள் மீதும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் மீதும் பலருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட காலத்தில் ஆற்றிய தொண்டு நாட்டின் விடுதலை போராட்ட தீயை மேலும் கொழுந்து விட்டு எரிய வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் பாரதி எப்போதும் கொண்டாட்டத்திற்குரியவர்தான்.

சுதந்திர தீ

சுதந்திர தீ

பாரதியெனில் மழித்த முகமும், காதுகள் மூடிய முண்டாசும் உங்களுக்கு நினைவில் வந்தால் அதை அழித்துவிடுங்கள். பாரதியின் உருவம் அவர் வணங்கும் காளியை (சக்தி) போன்றே உக்கிரமானதுதான். முகம் மறைத்த தாடி, தீக்கனல் பார்வை இதுதான் அவரின் அடையாளம். நாட்டின் விடுதலைக்காக இந்தியா முழுவதும் எரிந்துகொண்டிருந்த அந்த தீயின் கனல்தான் அந்த பார்வையில் பொதிந்திருந்தது. 'சுதேசமித்திரன்' இதழில் பாரதி மொழிப் பெயர்ப்பாளராக பணிக்கு சேர்ந்திருந்தார். இங்கிருந்து அவரின் வரலாற்றை தொடர்ந்தால் பொருத்தமாக இருக்கும்.

காசி மாநாடும் உத்வேகமும்

காசி மாநாடும் உத்வேகமும்

அப்போது அவருக்கு ஜி.சுப்பிரமணிய ஐயருடன் ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்க்கையையே மாற்றியது. 1905ல் காசி காங்கிரஸ் மாநாடு, கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதாவை சந்தித்தது என அவருக்கு பரவலான தொடர்பும், தகவல்களும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து நிகழ்ந்த வங்கப்பிரிவினை இந்தியா முழுவதுமே ஒரு உலுக்கு உலுக்கிற்று. இது பாரதிக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. இதன் பின்னர் மெட்ராஸ் திரும்பிய அவருக்கு 'சுதேசமித்திரன்' திருப்தியை கொடுக்கவில்லை.

புதிய 'இந்தியா'

புதிய 'இந்தியா'

பின்னர் அவர் 'இந்தியா' எனும் வார இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். இதன் பின்னர் அவர் எழுதி கட்டுரைகளில் அவர் கண்களில் இருந்த கனலின் வெப்பம் தெரிந்தது. இதனையடுத்து அவர் ஈடுபட்ட அனைத்துமே அவரின் சுதந்திர போராட்ட நடவடிக்கைகளின் உச்சம் என்று சொல்லாம். 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையிலிருந்து ஆட்களை திரட்டியது. அந்த மாநாட்டில் ஏற்பட்ட மோதல் என எல்லாமும் பாரதியின் விடுதலை உணர்வை மேலும் தீவிரப்படுத்தியது.

புதிய சங்கம்

புதிய சங்கம்

இதனையடுத்து அவர் சென்னையில் 'சென்னை ஜன சங்கம்' என்பதை தோற்றுவித்தார். இதனை வ.உ.சி தோற்றுவித்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. எப்படியாயினும் இதன் கொள்கையாக சுதேசியம், அந்நியப் பொருள் எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம், சுதேசியப் (சுயசார்பு) பிரச்சாரத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்தல் போன்றவையாக இருந்தன. இந்த சங்கம் தோன்றி அழியும் வரை இதன் மீது காவல்துறைக்கு இருந்த பார்வை, விலகவேயில்லை.

எரிச்சலூட்டிய புதிய 'இந்தியா'

எரிச்சலூட்டிய புதிய 'இந்தியா'

ஒரு பக்கம் வ.உ.சி கப்பல் ஓட்டியது, மறுபக்கம் இந்தியா பத்திரிகையில் எழுதிய தீவிர கட்டுரைகள் அப்புறம் இந்த சென்னை ஜன சங்கம் என எல்லாமும் சேர்ந்து பிரிட்டிஷ் காவல்துறைக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த மூவரும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்பில் இயங்கி வந்தனர். இந்த காலக்கடங்களில் பாரதி முழங்கிய முழக்கம் ஒன்று எக்காலத்திற்கும் பொருத்தமானதாய் இருந்தது. அதாவது "நம் இயற்கை உரிமையில் குறுக்கிடாத சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுவோம். ஆனால் சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக" என்பதுதான் அது.

கைது

கைது

இப்படியெல்லாம் பேசினால் ஆங்கிலேயர்கள் சும்மா இருப்பார்களா? இந்தியா பத்திரிகை மீது தணிக்கை நடத்தி அதன் ஆசிரியரை கைது செய்ய விரைந்தது. ஆனால் பாரதி அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அவருக்கும் அரவிந்தர் மற்றும் வ.வே.சு ஐயருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், இதனையடுத்து பாரதியின் செயல்பாடுகள், அவர் பெற்ற சிறை தண்டனை, தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (பிராமணர் அல்லாத இயக்கம்) குறித்து அவரின் நிலைப்பாடு என பின்னாட்களில் அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து இரு வேறு கருத்து இருக்கலாம்.

கனவு நனவானதா?

கனவு நனவானதா?

ஆனால் அவர் காலத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்த அவர் எடுத்த முயற்சிகளை இதன் மூலம் மறுத்துவிட முடியாது. ஆனால் அவர் போராடிய சுதந்திரம் இன்று நாம் பெற்றுவிட்டாலும் அவரின் மற்றொரு கனவான 'சுயசார்பை' நாம் முழுமையாக எட்டியிருக்கிறோமா? என்று நம்மை நாமே பரிசீலித்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனெனில், சில கடந்த 2014ல் உருவாக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் தோல்வி சமீபத்தில் செய்திகளாய் வெளியாகியிருந்தன. அதாவது ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை நாம் சுயமாக உருவாக்குவதில் சுணக்கமடைந்துள்ளோம் என்பதுதான் அந்த செய்தி.

வலியுறுத்துவோம்

வலியுறுத்துவோம்

அதேபோல சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியை நாடாளுமன்ற சபாநாயகர் உள்பட அனைவரும் ஏந்திச் சென்ற நிகழ்வு சுயசார்பு இந்தியாவுக்கு எவ்வளவு தொலைவில் நாம் இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிட்டு சுயார்பு எந்த அளவுக்கு சாத்தியம் என எதிர்க்ட்சிகள் எழுப்பும் கேள்வியையும் நாம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். அந்த வகையில் அவரின் தியாகத்தை நாம் நினைவுகூரும் இந்நாளில் அவரின் கனவை மெய்பிக்க தொடர்ந்து முயற்சிப்போம், வலியுறுத்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+