பொதுச் செயலாளர் யார்? அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார் மைத்ரேயன்! நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் மைத்ரேயன் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா இருந்த வரை அவரே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறைந்தவுடன் அந்த பதவியை பொதுக் குழு கூட்டி சசிகலாவுக்கு தாரை வார்த்தனர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். அவரும் வேறு வழியில்லாமல் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்தது, சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அதிமுக ஒருங்கிணைந்தது என அனைத்தும் மக்கள் அறிவர். இதையடுத்து சசிகலாவிடம் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பறிக்க பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது.

சசிகலா
இதையடுத்து சசிகலா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதால் அவர் இல்லாத நிலையில் அந்த பதவி நீக்கப்பட்டது. அந்த பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன.

அதிமுக
இதையடுத்து அதிமுக, ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என்ற இரட்டை தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவருக்கிடையே அதிகார போட்டி நிலவுவதாலும் அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வி அடைவதாலும் ஒற்றை தலைமை என்ற முழக்கங்கள் அதிகரித்துள்ளன.

பொதுச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளராக ஒருவரை தேர்வு செய்யலாமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

மாவட்டச் செயலாளர் கூட்டம்
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் அல்லது ஒற்றை தலைமை, அதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மைத்ரேயன் வெளியேறினார்
இங்கு பேசப்படும் முக்கிய தகவல்கள் வெளியே சென்றுவிடாமல் இருக்க மாவட்டச் செயலாளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு மைத்ரேயன் சென்றார். அப்போது அவரிடம் அங்கிருந்தவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார்கள். இதனால் கோபமடைந்த மைத்ரேயன் கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியே வந்துவிட்டார். அண்மைக்காலமாக மைத்ரேயன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications