Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை! அமைச்சர் எ.வ.வேலு மிகத் திட்டவட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை என நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை என்பது தொழில்நகரம் என்பதால் அதற்கு முன்னுரிமை தருமாறு தங்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக கூறினார்.

இதனால் திமுக அரசு கோவையை புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகமும், கேள்வியும் யாருக்கும் வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

கொங்கு ஈஸ்வரன்

கொங்கு ஈஸ்வரன்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைந்து நடைபெறுவதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ., இந்தப் பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அப்படி நீட்டித்தால் மட்டுமே எந்த நோக்கத்திற்காக அந்தப் பாலம் கட்டப்படுகிறதோ அந்த நோக்கம் (அதாவது போக்குவரத்து நெரிசலை குறைப்பது) நிறைவேறும் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இன்று கோவை தினசரி நாளிதழ் ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு அமைந்த பிறகு கோவை புறக்கணிக்கப்படுகிறதோ என்ற கேள்வியுடன் செய்தி வெளிவந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆனால் கோவை என்பது தொழில்நகரம் என்பதால் அதற்கு முன்னுரிமை தருமாறு தங்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாகவும் கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

புற வழிச்சாலைகள்

புற வழிச்சாலைகள்

கோவை சத்தியமங்கலம், கோவை மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதிகள் அனைத்தும் நாம் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் அது தெரியாமல் ஏதோ மத்திய அரசு தானாக முன்வந்து தமிழகத்திற்கு சாலை போட நிதி ஒதுக்கியது போலவும் அதனை தமிழக அரசு பயன்படுத்தாது போலவும் சிலர் பேசி வருவதாக வேதனைத் தெரிவித்தார்.

முதல்வரிடம் பேசி

முதல்வரிடம் பேசி

கோவையை பற்றி பேசி தனக்கு இந்தச் செய்தியை நினைவூட்டியதற்காக உறுப்பினர் ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+