சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டமார் பிளான்கள்".. பாஜக என்ன பந்து வீசினாலும்.. திருப்பி வாங்கி "சிக்ஸர்".. இது வேற மாதிரி ஸ்டாலின்

ஸ்டாலின் அரசு மீது விமர்சனம் வைக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: எதை பேசலாம், எதை சொல்லாம், எதை கேட்கலாம், எதை விமர்சிக்கலாம் என்று தெரியாமலும், திமுக அரசுக்கு எதிராக எந்த பெரிய பிரச்சினையையும் கிளப்ப முடியாமலும் எதிர்க்கட்சிகள் திணறி கொண்டிருக்கின்றன.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 23-06-2021

    திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழ்நாடு மிகப்பெரிய சிக்கலில் இருந்தது.. அதாவது ஆம்புலன்ஸிலேயே தொற்று நோயாளிகள் விழுந்து உயிரைவிடும் அளவுக்கு மோசமான நிலைமை இருந்தது.

    அதற்கு பிறகுதான், முழு மூச்சாக இறங்கி தொற்றை கட்டுப்படுத்தியாகிவிட்டது.. 11 மாவட்டங்களை தவிர்த்து மிச்ச தமிழ்நாடு இயல்பு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    புதுச்சேரியில் '3+2'.. ஒர்க் அவுட் ஆகுமா பாஜகவுடன் கூட்டணி ஆட்சி.. நாளை அமைச்சர்கள் பதவியேற்பு?புதுச்சேரியில் '3+2'.. ஒர்க் அவுட் ஆகுமா பாஜகவுடன் கூட்டணி ஆட்சி.. நாளை அமைச்சர்கள் பதவியேற்பு?

     மா. சுப்பிரமணியன்

    மா. சுப்பிரமணியன்

    எனவே, தொற்று விவகாரத்தில், எதிர்க்கட்சிகளால் எதையுமே சொல்ல முடியவில்லை.. தடுப்பூசி எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்பதை மாநில அரசுகள் சொல்லக்கூடாது என்று மத்திய சுகாதார துறை உத்தரவிட்டிருந்தது.. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பதை நாங்கள் எங்கள் மக்களிடம் சொல்வோம், எதையும் மறைக்க மாட்டோம் என்று கூறி, தடுப்பூசி கையிருப்பு எண்ணிக்கையை புட்டு புட்டு வைத்தார். இதனால் பாஜகவே மிரண்டு போனது.

    விவாதங்கள்

    விவாதங்கள்

    இதற்கு பிறகுதான் சட்டசபை தொடர்ந்து நடந்து வருகிறது.. வழக்கமாக சட்டசபை என்றால், விவாதங்கள் அனல் பறக்கும்.. தங்கள் கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வார்கள்.. ஆனால், இப்போதுவரை அவைநடப்பு நடக்கவே இல்லை.. அந்த அளவுக்கு ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்கிறது அவை நிகழ்வுகள்.

     செந்தில்பாலாஜி

    செந்தில்பாலாஜி

    அதேசமயம், பேரவையில் திமுகவை கேள்விகேட்டு திணறடிக்கலாம் என்று இருவிதமான பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.. ஒன்று மின்வெட்டு பிரச்சனை, மற்றொன்று ஒன்றியம் என்ற விவகாரம்... இதில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிக்கையை முழுசாக படிக்காமல், தமிழ்நாட்டில் கரண்ட் கட் ஆவதற்கு காரணமே அணில்கள்தான் என்பது பிரதானப்படுத்தப்பட்டது.

     ட்வீட்

    ட்வீட்

    அந்த அறிக்கையில் அணில்களும் ஒரு காரணம் என்றுதான் செந்தில்பாலாஜி சொல்லி இருந்தார்.. ஆனால், டாக்டர் ராமதாஸ் இதை ட்வீட் போட்டு வேறுவிதமாக சித்தரிக்க முயன்ற சம்பவமும் நேற்றைய தினம் நடந்தது.. அதேபோல, பாஜக ஒரு பிரச்சனையை கிளப்பியது.. குறிப்பாக நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் "எந்த நோக்கத்துடன் ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது" என்று கேள்வி கேட்டார்.

     விளக்கம்

    விளக்கம்

    இதற்கு "ஒன்றியம்" என்று சொல்வது அவ்வளவு சமூக குற்றமல்ல... சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதைதான் சொல்லி இருக்கிறோம்... மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல. பயன்படுத்துவோம். பயன்படுத்தி கொண்டே இருப்போம்... ஒன்றிய அரசு என கூறுவதை கண்டு யாரும் மிரள வேண்டாம்" என்று சட்ட நுணுக்க வார்த்தைகளை வைத்தே பதிலடி தந்தார் ஸ்டாலின்.

     விமர்சனம்

    விமர்சனம்

    இப்போது அடுத்த பிரச்சனையை கிளப்ப யோசித்து கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகள்.. ஆக, சொல்லிக் கொள்வது போல எந்தப் பெரிய பிரச்சினையும் இப்போதைக்கு இல்லை... தவிர, திமுகவும் தொடர்ந்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கி வருகிறது... அப்படியே தங்கள் மீது ஏதாவது தவறு வந்தாலும் அதை உடனடியாக சரி செய்து கொள்கிறது.. அதேசமயம், எதிர்க்கட்சிக, எதிரிக்கட்சிகளாக கருதாமல் அரவணைக்கிறது.. யாரிடமும் கெட்ட பெயர் வாங்காத வகையில் சிறப்பாக செய்படுகிறது.

     ராமதாஸ்

    ராமதாஸ்

    அவ்வளவு ஏன், வழக்கமாக டாக்டர் ராமதாஸ்தான் எதையாவது கிளறி கேள்வி எழுப்புவார்.. அந்த வகையில், இன்று பாமகவுக்குகூட ஒரு நல்ல செய்தியை சொல்லிவிட்டார் ஸ்டாலின்.. 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஜிகே மணி ஒரு கேள்வியை எழுப்பினார்.. அதற்கு முதல்வர், "வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று ஒட்டுமொத்த பாமகவுக்கும் குட் நியூஸ் சொல்லி உறுதியளித்துள்ளார்.

     ஜிகே மணி

    ஜிகே மணி

    இதனால் பிரச்சினையை கிளப்பி அரசியல் செய்ய முடியாத நிலையை நோக்கி எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டு வருகின்றன... அணில், ஒன்றியம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்ய நினைத்தாலும் அதுவும் எடுபடாமல் உள்ளது.. அதனால், வேறு என்ன பிரச்சனையை வைத்து கேள்விகளை கிளப்பலாம் என்று பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் யோசனையில் ஆழ்ந்துள்ளன..!

    English summary
    MK Stalins DMK gov is operating without any criticism from the Opposition
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X