சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட்டில் புதிய தகவல்களை வெளியிட தயாராகிறாரா முருகன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: நிர்மலா தேவி கூறிய வாக்குமூலம் பொய் என்றும் நீதிமன்றத்தில் உண்மையை சொல்வேன் என்றும் முருகன் கூறியதை வைத்து பார்க்கும் போது அவர் புதிய தகவல்களை வெளியிட தயாராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களை நிர்பந்தித்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

    இந்நிலையில் நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்தது முருகன், கருப்பசாமி கேட்டுக் கொண்டதாலேதான் என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

    வாக்குமூலமெல்லாம் வேஸ்ட்.. நிர்மலா தேவி கோர்ட்டில் வாயை திறந்தால் பலர் சிக்குவார்கள்? வாக்குமூலமெல்லாம் வேஸ்ட்.. நிர்மலா தேவி கோர்ட்டில் வாயை திறந்தால் பலர் சிக்குவார்கள்?

    பலிகடா

    பலிகடா

    இந்நிலையில் முருகனின் பெயரை டேமேஜ் செய்யும் வகையிலும் நிர்மலா தேவியின் வாக்குமூலம் இருந்தது. எனினும் முருகனின் மனைவியோ யாரையோ காப்பாற்ற தன் கணவரை பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    நிர்மலா தேவியின் வாக்குமூலத்தை அறிந்த முருகனோ இந்த வாக்குமூலம் அனைத்தும் பொய்யானவை. நீதிமன்றத்தில் உண்மையை தெரிவிப்பேன் என கூறியுள்ளார். இதனால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் முருகன், நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரை சுற்றி சுற்றியே கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான குற்றவாளிகள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    ரகசியங்கள்

    ரகசியங்கள்

    இந்நிலையில் நீதிமன்றத்தில் உண்மையை கூறுவேன் என்று முருகன் கூறியுள்ளதை பார்க்கும் போது உண்மையான குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல்களை அளிப்பாரா, அல்லது தன்னை டேமேஜ் செய்த நிர்மலா தேவி குறித்து சொல்லப்படாத ரகசியங்களை சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நிர்மலா தேவி தான் யாருடனெல்லாம் நெருக்கமாக இருந்தேன் என்று வெளியிட்ட பட்டியலை வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா.

    உண்மைகள்

    உண்மைகள்

    மேலும் இதற்கு முன்னர் நான் எந்த கல்லூரி மாணவிகளையும் இப்படி தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ள போதிலும் அதுகுறித்த உண்மைகளை முருகன் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு கொண்டு அளிக்கப்படும் வாக்குமூலத்தின் வாயிலாக உண்மை வெளியே வருமா என்றும் முக்கிய பெரும் புள்ளிகள் சிக்குவரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Professor Murugan who is in jail in connection with Nirmala Devi case is ready to reveal the truth in the Court?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X