கேடுகெட்ட 'எட்டப்பன்'.. சேரை தூக்கிட்டு ஓடுனாரே! சூடு சொரணை இல்ல! மாஜிக்களை வெளுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
சென்னை : "கேபி முனுசாமி ஒரு எட்டப்பன். முனுசாமிக்கு அடையாளம் கொடுத்ததே ஓபிஎஸ் தான். ஜெயலலிதா இருக்கும் வரை முனுசாமியால் வெளியிலேயே வர முடியவில்லை. ஓபிஎஸ் போட்ட பிச்சையால் தான் அதிமுகவில் பதவி பெற்றார். இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் 'ஆமாஞ்சாமி' போட்டு பதவியை வாங்கிவிட்டு, ஓபிஎஸ்ஸை விமர்சிக்கிறார்" என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், தங்கள் பலத்தை நிரூபிக்க இரு தரப்புமே கடுமையாக முட்டி மோதி வருகின்றனர். இரு தரப்பினருமே ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பரபரப்பான அதிமுக அரசியல் சூழலில் ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனிக்கட்சி - ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்குவாரா என சவால் விட்ட நிலையில், அதுபற்றி விமர்சித்த ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் பி டீமாக இருந்துகொண்டு, தேவையில்லாத கருத்துகளைக் கூறி கட்சித் தொண்டர்களை குழப்புகின்ற வேலையை செய்து வருகிறார். அனைவருமே எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் எதற்கு தனிக்கட்சி தொடங்க வேண்டும். நாங்கள்தான் கட்சி. ஓபிஎஸ் வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, அவருடைய பலத்தை அவர் காட்டட்டும் என விமர்சித்தார்.

ஜெயக்குமாருக்கு சூடு சுரணை இல்லை
இதுபற்றி ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஓபிஎஸ் ரேஞ்சுக்கு ஜெயக்குமார் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மெரினாவில் நடந்த கூட்டத்தில் சசிகலாவை அமர வைப்பதற்காக ஜெயக்குமாரும், பொன்னையனும் சேரை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். தனது வேட்டியால் நாற்காலியால் துடைத்து, சசிகலாவை அமரச் சொன்னார் ஜெயக்குமார். இன்று சசிகலாவையும், டிடிவி தினகரனையும் ஏளனமாக விமர்சித்துப் பேசுகின்றனர். அவர்களின் தயவு இல்லாமல் தானாக முன்னேறி வந்தது போல பேசக்கூடாது. ஓபிஎஸ், கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது என்கிறார் ஜெயக்குமார். முதலில், நீங்கள் உங்கள் தொகுதியில் ஜெயிக்க முடிந்ததா? ஜெயக்குமாருக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது." என்றார்.

எடப்பாடியை பாஜக இயக்குகிறதா?
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே அழைப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் மட்டும் பங்கேற்றார். அங்கு, ஓபிஎஸ்ஸுக்கு பாஜக தலைவர்கள் சில அறிவுரைகளைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் இருக்கும் முதலாளி சொல்வதைக் கேட்டு ஓபிஎஸ் நடக்கிறார் என எடப்பாடி தரப்பினர் விமர்சிக்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்று வந்தாரே.. அப்படி என்றால் எடப்பாடியை பாஜக இயக்குகிறது என்று சொல்லலாமா? முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பாஜக ஓபிஎஸ்ஸை அழைத்தது, அதன் அடிப்படையில் சென்று வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பாஜகவிடம் சரண்?
ஓபிஎஸ், முழுமையாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும், பாஜகவிடம் சரணடைந்து விட்டதாகவும் பாஜகவின் பேச்சைக் கேட்டே செயல்பட்டு வருவதாகவும் எழுந்து வரும் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணமூர்த்தி, "பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பாஜக தலைவர்களுடன் சந்திப்பது, கூட்டணி கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் தான். இந்தச் சந்திப்புகளை எல்லாம் அவர் பாஜக சொல்வதைக் கேட்கிறார் என்று முடிச்சுப் போடுவது தவறு." எனத் தெரிவித்துள்ளார்.

எட்டப்பன் - முனுசாமி
மேலும் பேசிய அவர், "கேபி முனுசாமி கேடுகெட்ட எட்டப்பன். முனுசாமிக்கு அடையாளம் கொடுத்ததே ஓபிஎஸ் தான். ஜெயலலிதா இருக்கும் வரை முனுசாமியால் வெளியிலேயே வர முடியவில்லை. ஓபிஎஸ் போட்ட பிச்சையால் தான் அதிமுகவில் பதவி பெற்றார். இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் 'ஆமாஞ்சாமி' போட்டு பதவியை வாங்கிவிட்டார். மேடையிலேயே சிவி சண்முகம் முனுசாமியை அப்படி திட்டுகிறார். சூடு சுரணை இல்லாமல் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறார். அவர் நடத்தும் குவாரி, பணம் தான் அவருக்கு முக்கியம். அதனால், எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுவிட்டு சுரணை கெட்டுப்போய்தான் ஈபிஎஸ் அணியில் இருக்கிறார்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications