”எம்ஜிஆர் அதிமுக” புது கட்சி தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்? விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா?
சென்னை: ஓ பன்னீர் செல்வம் அணியில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் ஜாம்பவனாக அறியப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். பாமக, விஜயகாந்துடன் இணைந்து செயல்பட்ட அவர் தற்போது ஓ பன்னீர் செல்வத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஆலோசகராக இருந்து வந்தார். ஆனால் ஓபன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் யாருடன் கூட்டணி என்பதையும் தெளிவாக கூறாம் இருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணா மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக பொறியாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்குள் வந்தார். திமுக தலைவரான கருணாநிதி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றினார். அமைச்சராகவும் பதவி வகித்தார். எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதாவுடன் பயணித்த பண்ருட்டியார் பாமகவில் இணைந்தார்.
பின்னர் மக்கள் நல உரிமைக் கழகம் என்ற கட்சியை தொடங்கி திமுக கூட்டணியில் இணைந்தார். இதன் பிறகு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தார். அதிமுக தேமுதி கூட்டணியை முன்னின்று உருவாகினார். பின்னர் மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் பெரிய அளவில் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த அவர் ஓ பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவை அமைத்த போது அதன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் அதிருப்தி ஏற்பட்டு புதிய கட்சியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓ பிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications