போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக புதிய பரபரப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கும் முன்மொழிவு வந்துள்ளதாகவும், அந்த தொகுதியிலும் உதயசூரிய சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் அதற்கு சாதகமான பதில் வராததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. பல மாதங்களாக தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்காத டெல்லி தலைகள் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கின்றனர். பாஜக காங்கிரஸ் என தேசிய கட்சிகளின் தலைவர்கள் தற்போது பாதி நாட்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள்.

திமுக கூட்டணி
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக முழுக்க முழுக்க கூட்டணி விவகாரங்களை தனியே கையாண்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர். கேஎன் நேரு உள்ளிட்டோர் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதி பங்கீடு
அதேபோல அடுத்தடுத்து இரு தேர்தல்களில் தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார். மறுபுறம் தனித்து தான் போட்டி என களத்தில் இறங்கி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். மறுபுறம் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் சில அரசியல் கட்சிகள் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிப்படையாகவே சில கட்சிகள் போர்க் குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றன.
திமுக கூட்டணி அதிருப்தி
2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைந்த திமுக கூட்டணி தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பழைய கட்சிகளோடு தேமுதிக, மக்கள் நீதி மய்யம் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்ட புது வரவுகளும் இருக்கிறது. 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக திட்டமிட்டு இருந்தாலும் புதிய கட்சிகளின் வரலாறு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி
இதனால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான தொகுதி பங்கிட்டை குறைப்பதோடு திமுக சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதுதான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாநிலங்களவை சீட்டு வழங்கப்படுகிறது.
கூட்டணியில் சலசலப்பு
புதிதாக கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு 6 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளும் வழங்கப்படலாம் என சொல்லப்படுவதோடு மக்களவை சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆகியவற்றிற்கும் கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும், கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சீட் ஒதுக்க்ப்பட்டு அவர்களையும் திமுக சின்னத்திலேயே போட்டியிட வைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
தவாக வேல்முருகன்
இந்த சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுவது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தொகுதிகள் வழங்கப்படாததால் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர் வெளியேறினால் அதிமுக - பாஜக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தீவிரமாகும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications