சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனவரி 25ஆம் தேதி பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதற்காக இந்த அழைப்பு? என்ன பின்னணி?

Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 25ஆம் தேதி நாளை மறுதினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

டைம் வேஸ்ட்..மணி வேஸ்ட்! மொத்தமாய் இறங்கும் பவர்! ஈரோடு இடை தேர்தலை புறக்கணித்த பாமக! இதுதான் காரணம் டைம் வேஸ்ட்..மணி வேஸ்ட்! மொத்தமாய் இறங்கும் பவர்! ஈரோடு இடை தேர்தலை புறக்கணித்த பாமக! இதுதான் காரணம்

தைலாபுரம் தோட்டம்

தைலாபுரம் தோட்டம்

''பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.''

ராமதாஸ் தலைமை

ராமதாஸ் தலைமை

''பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.''

வளர்ச்சிப் பணிகள்

வளர்ச்சிப் பணிகள்

''பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாமகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், சித்திரை முழு நிலவு விழா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது உட்பட இன்னும் பல முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தீர்மானங்கள்

தீர்மானங்கள்

இதேபோல் இந்தக் கூட்டத்தில் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வலியுறுத்தல், மதுபானக் கடையின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பன உட்பட இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

English summary
It has been announced that the meeting of district secretaries of the Pmk will be held the 25th in a tense political environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X