சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம்
சென்னை: சென்னையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னைக்கு ஒரு மாணவி வந்திருந்தார். சென்னை வந்த சில நாட்களிலேயே அந்த மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து யாரோ அவருக்கு அனுப்பியிருந்தனராம்.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி வெளியே செல்ல காத்திருந்த மாணவியை அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக புகார் எழுந்தது. மேலும் அந்த மாணவியின் முகத்தில் பொடி பூசியதாகவும் ஒரு மணி நேரத்திற்கு பிறகே வேறு இடத்தில் இறக்கிவிட்டதாகவும் புகார் எழுந்தது.
தனது உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்ததால் 10 ஆம் தேதி அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த போது மீண்டும் 3 பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றிச் சென்று மிரட்டியதாக அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதில் சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.
திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று திரும்பிய மாணவியை அதே கும்பல் மீண்டும் மகிழுந்தில் கடத்திச் சென்று நடந்த கொடுமை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. மாணவி கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதால் மேலும் பல தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் நிலைநிலவுகிறது என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, காட்டாட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஆனால், இதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கடைசி நேரக் கொள்ளையிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கையாலாகாத அரசு. மக்களைக் காப்பதற்கு துப்பற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள். இவ்வாறு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாணவியின் புகார் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் அளித்தது பொய் என தெரியவந்தது.
அதாவது படிப்பு, இதர மன உளைச்சலில் இருந்ததால் அது போல் பொய் சொன்னதாக அந்த மாணவி தகவல் அளித்ததாக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
-
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications