களமிறங்கிய பிடிஆர்.. வந்ததே கோபம்.. உயர்த்தப்படும் வடஇந்திய மாநில எம்பி சீட்டுகள்.. வெளுத்துட்டாரே!
சென்னை: லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் உரிமைகள் கடுமையாக பாதிக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டு இருந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் செய்த போஸ்டில், தேர்தல் நேரத்தில், தோல்வி கண்ணுக்கு தெரிவதால் திமுக டெல்லி எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கிறது என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் உரிமைகள் கடுமையாக பாதிக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. வெறும் 2 நாட்கள் முன்னறிவிப்புடன் நாடாளுமன்றத்தைக் கூட்டச் சொல்லி .. இந்த மசோதாவை "அறிமுகப்படுத்தியது" யார்? நாம் இப்போது எதிர்வினையாற்றாவிட்டால், வேறு எப்போதுதான் எதிர்வினையாற்றப் போகிறோம்?
இது நமது மாநிலத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு மிக முக்கியப் பிரச்சனையாகும். எனவே, இந்தத் தேர்தல் காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு NDA கட்சி மற்றும் வேட்பாளரிடமும் நாம் பின்வருமாறு கேட்க வேண்டும்: இந்த மசோதா குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? நீங்கள் தமிழகத்தின் பக்கம் நிற்கிறீர்களா, அல்லது டெல்லியின் பக்கமா?, என்று காட்டமாக கேட்டுள்ளார்.
என்ன பின்னணி?
இந்திய ஜனநாயகத்தின் வரைபடத்தையே மாற்றி அமைக்கக்கூடிய மிக முக்கியமான முன்னெடுப்பை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. கடந்த 1976-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் தொகுதிகள் மறுவரையறை மீதான தடையை நீக்கி, புதிய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இடங்களை மாற்றியமைக்க 'அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (131-வது திருத்தம்), 2026' கொண்டு வரப்படுகிறது.
இந்த வரலாற்றுச் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா, வரும் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் ஒவ்வொரு மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையைத் தீர்மானிக்கும்.
மாநிலச் சட்டமன்றங்களின் மொத்த உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
ஸ்டாலின் வீடியோ
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரச்சாரத்திற்காக அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தால், இந்த கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருத்தத்தை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள் என்று முதலில் இருந்தே நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

உத்தரவாதம் அளிக்காத மோடி
தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதல்வர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தினோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதை நாங்கள் கேட்டோம்.
சொன்னதை ஒழுங்காக செய்ததற்காகவே எங்களுக்கு தண்டனை கொடுப்பீர்களா? தென் மாநிலங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. நாம் சொன்ன எதைய்டும் காதில் வாங்கமல், திமுகவோடு மட்டுமல்ல, எந்தக் கட்சியோடும் எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனையை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.
தமிழக எம்பிக்கள் பங்கேற்பார்களா?
நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இப்படி மறைத்து மறைத்து செய்வதால், ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் வலுவடைகிறது. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்பிக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டை பாதிப்பதை மாதிரியோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாக காட்டும். முதல்வரான என்னுடைய தலைமையில் தமிழ்நாடே போராடும். ஒவ்வொரு தெருவிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் போராடுவார்கள். இதனை பிரதமர் மோடிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications