மும்மூர்த்திகளும் விஜய் பக்கம் ஐக்கியம்.. ராகுலின் 3 மூளைகளும் தவெகவுடன் நெருக்கம்.. ஷாக்கான திமுக?
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நெருக்கமான மூன்று மூளைகளும் தவெகவின் விஜயுடன் நெருக்கமாகி உள்ளது. அதாவது ராகுலுக்கு நெருக்கமான 3 தலைகள் விஜய்க்கு நெருக்கமாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக முக்கியமான பார்முலா ஒன்று அவர் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் + 100 இடங்களில் தவெக போட்டியிடும் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்கும். கேரளாவில் 10 இடங்கள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். புதுச்சேரியில் 5- 10 தொகுதிகள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். இதற்காக விஜய் தீவிரமாக காங்கிரசின் டெல்லி தலைகள் உடன் பேசி வருகிறாராம்.

1. ராகுல் காந்தியின் மூளை
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையயடுத்து இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள்ள சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.
2. ராகுலின் இன்னொரு மூளை - கேபி பைஜூ
கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட நான்கு பேர் டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை இவர்கள் ஆஜராக உள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக ராகுலின் ரைட் ஹேண்ட் ஒருவர் களமிறங்க உள்ளாராம்.
ராகுலின் ரைட் ஹேண்ட் என்று அழைக்கப்படும் முன்னாள் எஸ்பிஜி அதிகாரி ஒருவர்தான் விஜய்க்கு அறிவுரை வழங்க உள்ளாராம். அது வெறும் யாரும் இல்லை கேபி பைஜூ என்ற ராகுலுக்கு நெருக்கமான நிர்வாகி. சிபிஐ விசாரணையில் என்ன பேச வேண்டும்? என்ன ஆதாரங்களை கொடுக்க வேண்டும்? என்று முக்கியமான ஆலோசனைகளை வழங்க உள்ளாராம். கேபி பைஜூ ராகுலுக்கு மிக நெருக்கம். அவர் இப்போது விஜயுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆதாரங்களை விசாரணையில் சமர்ப்பிக்க தவெக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை அந்த ரைட் ஹேண்ட் செய்வார் என்று கூறப்படுகிறது. ராகுலுக்கு தெரிந்தேதான் விஜய்க்கு ஆதரவாக இவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
3. ராகுலின் இன்னொரு மூளை - கிரிஷ் சோடங்கர்
ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார் . இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஏற்கனவே ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம்.
கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் 70 இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். இம்முறை சுமார் 70 தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்; முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. கிரிஷ் சோடங்கர் இதை நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கேட்டதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
காங்கிரஸின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இவர் விஜயுடன் பேசவும் திட்டமிட்டு வருகிறாராம். தவெக ஆட்சியில் பங்கு கொடுத்தால் ஏன் அவர்களுடன் செல்ல கூடாது என்று கிரிஷ் சோடங்கர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
-
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications