தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு
சென்னை: தமிழகத்தின் தேர்தல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு ரொம்பவே ஃபேமஸ்.. ஆனால் தைலாபுரம் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் சந்திப்பு என்பது அரசியல் விமர்சகர்களே கணிக்க தவறிய ஒரு நகர்வாக பார்க்கப்படுகிறது.. இப்படியொரு கூட்டணி யாருமே எதிர்பாராத ஒன்று.. இதுவரை திமுக, அதிமுக, பாஜக என மூன்று முனைகளில் சுழன்று கொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸின் கணக்குகள், இப்போது சசிகலாவின் வருகையால் மொத்தமாக புதிய திசையை நோக்கி திரும்பியிருக்கின்றன..!!!
பலமான கூட்டணிகள் ஒருபுறம் களம் கண்டுள்ள நிலையில், தனித்து விடப்பட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மூன்றாவது அல்லது நான்காவது அணியாக உருவெடுப்பது வெறும் வியூகமா அல்லது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வைக்கப்படும் செக் மேட்டா என்பது தெரியவில்லை..

சசிகலா - ராமதாஸ்
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் கிங் மேக்கராக இருந்த ராமதாஸ், இந்த தேர்தலில் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது.. அன்புமணி ஒரு பாதையை நோக்கி நகரும்போது, ராமதாஸ் தனது அரசியல் கவுரவத்தையும் சமூக வாக்குகளையும் தற்காத்துக் கொள்ள போராடி கொண்டிருக்கிறார்..
இந்த இக்கட்டான சூழலில் சசிகலாவின் திடீர் சந்திப்பு, "துரோகங்களை வீழ்த்துவது" என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது.. சசிகலாவும் அதிமுகவில் தனக்கான இடத்தை இழந்து தனித்து விடப்பட்டுள்ள நிலையில், ராமதாஸுடன் அவர் கைகோர்ப்பது என்பது தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும் வட மாவட்ட வன்னியர் வாக்குகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சியாகும்..!!
டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு?
இவர்களின் இந்தக் கூட்டணி முயற்சிக்கு தவெக தலைவர் விஜய்யின் ஆதரவு கிடைக்குமா என்பதுதான் அடுத்த பெரும் கேள்வி.. விஜய்யிடம் உள்ள இளைஞர் பட்டாளம் மற்றும் தலித் வாக்குகளுடன், இந்த சமூக தலைவர்களின் செல்வாக்கும் இணைந்தால் அது ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியை கண்டிப்பாக உருவாக்கக்கூடும்..
அதேபோல கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களையும் இந்த அணியில் இணைப்பதன் மூலம், ஒரு வலுவான மாற்று சக்தியை உருவாக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்..
சமூக வாக்குகள் - யாருக்கு லாபம்
ராமதாஸ் - சசிகலா உருவாக்கும் இந்த அணியால், சில சாதகங்கள் இருக்கவே செய்கின்றன.. குறிப்பாக ஜாதி ரீதியான வாக்குகள் சிதறாமல் ஒருமித்து விழ வாய்ப்புள்ளது.. ஆனால், நீண்டகாலமாக வெவ்வேறு துருவங்களாக இருந்த இந்த சமூக வாக்குகள் தேர்தல் களத்தில் எப்படி ஒன்று சேரும் என்பது ஒரு சேலஞ்சிங்கான விஷயம்தான்.
இந்த கூட்டணியால் யாருக்கு லாபம் என்ற கேள்விக்கு விடை தேடினால், அது நிச்சயம் பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.. குறிப்பாக அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளில் வாக்குகளை பிரிப்பதன் மூலம், அதன் வெற்றி வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வலிமை இந்த அணிக்கு உண்டு.. அதேபோல் பாஜகவின் வாக்கு வேட்டைக்கும் இது முட்டுக்கட்டையாக அமையும்..
ராமதாஸ் மற்றும் சசிகலாவின் இந்த அதிரடி நகர்வு வெறும் தேர்தல் கணக்கு மட்டுமல்ல, தங்களை ஓரங்கட்டியவர்களுக்குத் தரும் பதிலடியாகவும் அமையக்கூடும்.. மொத்தத்தில், இந்த "தைலாபுரம் ரகசியம்" தமிழக தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்ற போகிறதா அல்லது வாக்கு பிரிப்புக்கான ஒரு கருவியாக மட்டும் நின்றுவிடப் போகிறதா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications