சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! இனிமேல் வாண்டுகளுக்கு ‘ஹோம் ஒர்க்’ இல்லை!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹோம் ஒர்க் எனப்படும் வீட்டு பாடங்களை பள்ளிகள் தரக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் சிபிஎஸ்சி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளிகளில் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஹோம் வொர்க், ப்ராஜெக்ட் ஒர்க் எனப்படும் பல்வேறு வகைகளில் நெருக்கடி அளிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகவே புகார்கள் எழுந்துள்ளன.

இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5

வீட்டுப் பாடம்

வீட்டுப் பாடம்

சிறு வயது குழந்தைகளுக்கு புத்தக சுமையோடு வீட்டு சுமையும் அதிகரிப்பதால் அவர்களது கல்வி மற்றும் மன உறுதி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சிபிஎஸ்சி கல்வித் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார் மேலும் சிபிஎஸ்சி பள்ளிகள் அனைத்தும் ncert பாடத்திட்டத்தையும் பாடப் புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சி க்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தா விட்டால் அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை

இந்த உத்தரவு பிறப்பித்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது சில தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒன்று இரண்டு ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது எனவும் இது தொடர்பாக பறக்கும் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

மேலும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டதா இல்லையா என பறக்கும் படையினர் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு பாடம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு பாடங்கள் கொடுக்கும்போது அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கூறியிருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு வீட்டுப்பாடமே கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Tamil Nadu school education department has ordered that schools should not give homework to the students of class one and two studying in schools in Tamil Nadu ; தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்களை பள்ளிகள் தரக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X