சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்...சிபிசிஐடி கையில் சிக்கிய ஆதாரம் - இ மெயில் முடக்கம்
சென்னை: இமெயில் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும், வீடியோ காலில் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும் சிக்கியதை அடுத்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி காவல்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார். சிவசங்கர்பாபா வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

சிவசங்கர் பாபா கைது
டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 1ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுசீல்ஹரி பள்ளியில் விசாரணை
சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பல கேள்விகளை கேட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை நேரடியாக கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

ஹார்ட் டிஸ்க்
பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Recommended Video

ஆபாச பதிவுகள்
சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சல் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச பதிவுகள் சிக்கி உள்ளது என்றும், அதில் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரம் சிக்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இமெயில் கணக்கை சிபிசிஐடி காவல்துறையினர் முடக்கி உள்ளனர்.

ஆதாரங்கள் சிக்கின
இந்த விசாரணையின்போது சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் விசாரணையில் தேவையான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications