இனி ஆயிரம் கோடினு உருட்ட முடியாது! பெரிய ஹீரோக்களுக்கு தான் சிக்கலே! தியேட்டர்கள் ஓனர்கள் அதிரடி
சென்னை: ஓடிடி தளங்களின் ஆதிக்கம், ரசிகர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தியேட்டர்களில் கட்டணத்தை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக மதுரை, ராமநாதபுரம் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் போது ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. இதனால் ரசிகர்களை தவிர பொதுமக்கள் தியேட்டர்களுக்கு வருகை தருவது வெகுவாக குறைந்துவிட்டது.
ஒரு குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டுமனால், டிக்கெட் கட்டணம், பார்க்கிங், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றிற்காக குறைந்தபட்சம் 2000 ரூபாய் வேண்டும் என்பதால், பேமிலி ஆடியன்ஸின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

திரையரங்கு கட்டணம்
மேலும், அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள் வந்துவிட்ட பிறகு தியேட்டரை விட வீடுகளில் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் பிரபலமான பல திரையரங்கங்கள் மூடு விழா காண்பதும் இதனால் தான். இந்த நிலையில் தியேட்டர்களுக்கு ரசிகர்களை குறிப்பாக குடும்ப ரசிகர்களை வரவேற்கும் வகையில் அதிரடி முடிவுக்கு தயாராகி இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
ஒடிடி தாக்கம்
அதன்படி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை மட்டுமே பெற போவதாக கூறி இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இன்று மதுரை ராமநாதபுரம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை ராமநாதபுரம் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை ராமநாதபுரம் சினிமா விநியோகஸ்தர் சங்கத்திற்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
டிக்கெட் விலை குறைப்பு
தற்போது மல்டிபிளக்ஸ் எனப்படும் தியேட்டர்களுக்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை வசூலிக்க விநியோகஸ்தர்கள் உரிமை கொடுத்துள்ளனர். அதே வேளையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆகையால் நவம்பர் 1ஆம் தேதி முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என்று தீர்க்கமான முடிவு எடுத்துள்ளனர். இது சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு நிர்ணய கட்டணம்
மேலும் திரையிடும் திரைப்படங்கள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் வரை விநியோகஸ்தர்கள் தர வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இனிமேல் அவ்வாறு 80 சதவீதம் தர முடியாது என்றும், நடிகர் ரஜினிகாந்த் விஜய், அஜித் போன்ற பிரபலங்களின் திரைப்படங்களுக்கு 70% மட்டுமே தரப்படும் எனவும், ஆங்கில திரைப்படங்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கட்டணம் தர முடியும் என்றும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த இரண்டு தீர்மானங்களையும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications