தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 25 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றைய தினம் தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிச. இறுதி முதலே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் வரும் பிப். 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 24,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,03,702ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
தினசரி கொரோனா உயிரிழப்பும் 50க்கு குறைவாகவே உள்ளது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 தனியார் மருத்துவமனைகளிலும் 26 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவை மற்றும் சேலத்தில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,506 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தே வருகிறது. நேற்று 2,11,863 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 2,08,350ஆகக் குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27,885 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,57,846ஆக உயர்ந்துள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
அதேபோல மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் இப்போது 18.3ஆக உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 29%ஆகவும் கோவையில் 26%ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 30% வரை சென்ற போதிலும், கடந்த ஒரு வாரமாக அது குறைந்தே வருகிறது. இன்றைய தினம் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 20ஆக உள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4508ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கோவையில் தினசரி பாதிப்பு 3309ஆக உள்ளது. மேலும், செங்கல்பட்டு (1614), ஈரோடு(1198), சேலம்(1264), திருப்பூர்(1649) மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் உள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications