Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

த.வெ.க + அ.தி.க.. விஜயுடன் கூட்டணி வைத்த புதிய கட்சி.. இது யாருன்னு தெரிஞ்சா.. ஆடிப்போய்டுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு புதிய கூட்டணி குறித்த யூகங்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் (TVK), சசிகலாவின் சகோதரர் வி.கே. திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகமும் கைகோர்க்கப் போவதாக வெளியாகும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இரண்டு கட்சிகளுமே இதுவரை ஒரு சட்டசபை தேர்தலைக்கூட சந்திக்காத புதிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்தக் கூட்டணி குறித்த பேச்சுக்கள் இப்போதே அதிமுகவினரின் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கியுள்ளன.

vijay

வியூகமும் பின்னணியும்

தமிழக அரசியலில் "மாற்று சக்தி" என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள விஜய்க்கு, அடிமட்ட அளவில் வலுவான ஒரு அரசியல் கட்டமைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் திவாகரனுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் மன்னார்குடி குடும்பத்தின் அரசியல் அனுபவம் விஜய்க்குப் பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரன் வந்துவிட்டார், அமமுக வந்துவிட்டது என்று குஷியில் இருக்கும் அதிமுக கூட்டணிக்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறலாம்.

சசிகலாவின் ஆசி: அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், சசிகலாவின் அரசியல் அனுபவமும், வழிகாட்டுதலும் இந்தக் கூட்டணிக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைப்பு ரீதியான பலம்: திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் பழைய அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்யக்கூடும். முக்குலத்தோர் வாக்குகளை பிரிக்கும். ஆனால் கள அளவில் இது பெரிதாக உதவாது. ஏனென்றால் மன்னார்குடி தாண்டி திவாகரனுக்கு பெரிய பவர் இல்லை.

TVK Vijay

வெற்றிக் கூட்டணி அமையுமா?

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு இடையே, ஒரு வலுவான மூன்றாவது அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். ஆனால் தேமுதிக, காங்கிரஸ், விசிக என்று யாரும் விஜயுடன் வரவில்லை. குறைந்தபட்சம் திவாகரனுடன் இணைவதன் மூலம், அதிமுகவின் அதிருப்தி வாக்குகளையும், தென் மாவட்ட வாக்குகளையும் குறிவைக்க முடியும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.

தேர்தலைச் சந்திக்காத இரண்டு கட்சிகள் இணைந்து, பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட திராவிடக் கட்சிகளை வீழ்த்த முடியுமா என்பது பெரிய கேள்வி. இந்தக் கூட்டணி வெறும் யூகமாக இல்லாமல் உண்மையாக மாறும் பட்சத்தில், அது டெல்டாவில் விஜய்க்கு உதவலாம்.

1. அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு?

இந்தக் கூட்டணியால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா விசுவாசிகள்: டெல்டாவில் திவாகரன் மற்றும் சசிகலாவின் பிம்பம் இன்னமும் ஒரு குறிப்பிட்ட சதவீத பழைய அதிமுக தொண்டர்களிடம் செல்வாக்குடன் உள்ளது. இவர்கள் விஜய்யுடன் இணையும்போது, அந்த வாக்குகள் அப்படியே இந்த புதிய கூட்டணிக்கு நகர வாய்ப்புள்ளது.

முக்குலத்தோர் வாக்குகள்: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் சசிகலா/திவாகரன் தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினால், அது அதிமுகவின் கோட்டைகளைச் சிதைக்கும்.

2. திமுகவிற்கு சாதகமா? பாதகமா?

எதிர்க்கட்சி வாக்குகள் அதிமுக, தவெக - திவாகரன், நாதகே என மூன்றாகப் பிரிவது திமுகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கலாம். முக்கியமாக டெல்டாவில் முக்குலத்தோர் வாக்குகள் பிரியும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் இது திமுகவிற்கு சாதகமாக மாறும்.

பணபலம் + ஆள்பலம்: விஜய்யின் சினிமா கவர்ச்சியும், திவாகரன் தரப்பின் தேர்தல் மேலாண்மை நுணுக்கங்களும் இணையும்போது, இந்த மண்டலத்தில் ஒரு புதிய அதிகார மையம் உருவாகும்.

"மன்னார்குடி" குடும்பத்தின் ரகசிய தேர்தல் விட்டமின் எம் வியூகங்கள் விஜய்யின் அரசியலுக்குப் பெரிய "பேக்-அப்" (Back-up) ஆக அமையும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+