Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக நீதிக்கு ஆபத்து எதுவுமில்லை...மக்களை திசை திருப்ப திமுக முயற்சி - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு சமூக நீதி என்று பேசி மக்களை திசை திருப்ப முயல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டனர். ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே நிறைவேற்ற வில்லை. மக்களை திசை திருப்பவே, சமூக நீதி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக் கொள்கையை காக்க அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என கடந்த 26ஆம் தேதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அவர் சில தினங்களுக்கு 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். சமூக நீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது, இது சாதாரணமாக கிடைத்து விடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் பயனாக சமூக நீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை சாதாரணமாக கிடைத்துவிடவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமூக நீதி பற்றி பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சி செய்யவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று மாபெரும் தத்துவத்தை தமிழக மக்களுக்கு கூறிய அண்ணாவின் 53வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அண்ணாவின் புகழ்

அண்ணாவின் புகழ்

காங்கிரஸ் அரசாங்கம் தமிழகத்தை தாழ்ந்த நிலைக்கு கொண்டு போனது. 1967ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்று தாழ்ந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர பல்வேறு திட்டங்களை வகுத்தவர் அண்ணா என்று ஜெயக்குமார் கூறினார். அண்ணா மறைந்து 53 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு மட்டுமல்ல அவரது புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

சமுக நீதி பற்றி கேள்வி

சமுக நீதி பற்றி கேள்வி

சமூக நீதி கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க ஸ்டாலின்,முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் புதிய யுக்தியை கையாளுகிறார். சமூக நீதி காப்பது என்பது ஒரு யுக்தி என்று தெரிவித்தார்.

திசை திருப்ப முயற்சி

திசை திருப்ப முயற்சி

சட்டசபைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு சமூக நீதி என்று பேசி மக்களை திசை திருப்ப முயல்வதாகவும் குற்றம் சாட்டிய ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில் சமூக நீதி, தமிழின பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டனர். ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. மக்களை மறக்கடிக்க ஊடகங்கள் அதைப்பற்றியே பேச வேண்டும் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடத்துகின்றனர். அதுவும் ஒரு யுக்திதான்.

ஆபத்து எதுவும் இல்லை

ஆபத்து எதுவும் இல்லை

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இறந்த போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது, இப்போது தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் தமிழர்கள், தமிழினம் என்று பேசுகின்றனர். இப்போது புதிதாக சமூக நீதி என்று பேசுகின்றனர். சமூக நீதிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே சமூக நீதி காப்பாற்றப்பட்டு விட்டது.

சமூக நீதி காத்த வீராங்கனை

சமூக நீதி காத்த வீராங்கனை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. எஸ்.சி, எஸ்டிக்கு 18 சதவிகிதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தி பாதுகாப்பு வழங்கிய ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். இன்றைக்கும் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்க காரணம் ஜெயலலிதாதான். சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிருப்தியை மறைக்க முயற்சி

அதிருப்தியை மறைக்க முயற்சி

ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நிறைய திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா. இப்போது தேர்தல் வருகிறது. திமுக அரசு மீது உள்ள கடுமையான அதிருப்தியை மறைக்கவே சமூக நீதியை திமுக கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. எம்எல்ஏக்களே சரியில்லாமல் இருக்கிறார்கள். என்றும் குற்றம் சாட்டினார் ஜெயக்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+