தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!
சென்னை: விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளின் பிடிவாதம் காரணமாக, தேமுதிகவிடம் தொகுதிகளை குறைத்து கொள்ள திமுக மேலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் தேமுதிகவுக்கு 9 சீட்கள் கொடுக்க திமுக முடிவு செய்திருந்த சூழலில், இம்முறை 7க்கு குறைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுது உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இருப்பினும் திமுகவின் முக்கிய கூட்டணியான விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

தேமுதிகவை பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் கூட்டணிக்கு வருவதற்கு முன்பாகவே தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை இறுதி செய்தார்.
ஆனால் திமுக மேலிடம் நினைத்ததை போல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் செல்லவில்லை. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்துள்ளன. சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தேமுதிகவிடம் மீண்டும் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதலில் தேமுதிகவுக்கு 9 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க திமுக முன் வந்திருந்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் பிடிவாதம் காரணமாகவே தேமுதிகவுடன் திமுக மீண்டும் பேசி வருகிறது. இதன் காரணமாக தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, அங்கு பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது வந்த பிரேமலதா விஜயகாந்த் பெரியளவில் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு பின்னணியில் திமுகவின் இந்த தொகுதி குறைப்பு பேச்சுவார்த்தை தான் என்று சொல்லப்படுகிறது. இதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த பிரச்சனைகளை திமுக சரி செய்யுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications