பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்?
சென்னை: பனையூர் அலுவலகத்தில் தவெகவின் 60 நிர்வாகிகளிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி இருக்கிறார். இந்த நேர்காணலுக்கு பின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்திருக்கிறார். இந்த நேர்காணலில் நடந்தது என்பது தொடர்பாக கொஞ்சம் விவரமாக விசாரித்தோம். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக சார்பாக விருப்ப மனு பெற்றவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று பனையூரில் தொடங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளருக்கு இருக்கும் செல்வாக்கு, பணம், சமூக அடிப்படையில் நேர்காணலுக்கு பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். முதலில் சீனியரான செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் தனியாக பேசியுள்ளார்.

பின்னர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், மரியா வில்சன் உள்ளிட்டோரை அழைத்து பேசிவிட்டு உங்களின் தொகுதிகளில் செய்யும் பணிகளை தொடருமாறு வாழ்த்தி அனுப்பி இருக்கிறார். இதன்பின் மண்டல வாரியாக 5 பேராக விஜய் முன் சென்று அமர்ந்துள்ளனர். அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடிய விஜய், தேர்தலுக்கு பின் உங்களை எம்எல்ஏ-வாக பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அதேபோல் உங்களுக்காகவே அனைத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன்.. இந்த பயணத்தில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம்.. நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை செய்யுங்கள் என்று தட்டிக் கொடுத்துள்ளார். மொத்தமாக விஜய் 60 பேரை நேர்காணல் செய்திருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மாவட்டச் செயலார்கள் தான்.
இதனால் சீட் உறுதி என்பதால் ஸ்வீப் பாக்ஸ் உடனே பனையூர் வந்துள்ளனர். அதேபோல் விஜய்யை சந்தித்துவிட்டு வெளியில் வரும் போது, ஜான் ஆரோக்கியசாமி நிர்வாகிகள் தரப்பில் ஒரு பை கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளின் பெயரில் இருந்த பைகளில், அந்தந்த தொகுதிகளின் நிலவரங்கள், பூத் கமிட்டியின் வலிமை, அடுத்த 30 நாட்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்படி வேளச்சேரியில் தாமு, ஆர்கே நகர் தொகுதியில் மரியா வில்சன், சேலம் தெற்கு பார்த்திபன், திருச்செங்கோடு அருண்ராஜ், ஸ்ரீரங்கம் குப கிருஷ்ணன், காரைக்குடி பிரபு, கொளத்தூர் விஎஸ் பாபு, மதுரை மேற்கு கல்லாணை, திருப்பரங்குன்றம் சிடிஆர் நிர்மல்குமார், வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா, விருகம்பாக்கம் சபரிநாதன், கோவை வடக்கு சம்பத் குமார் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம் செங்கோட்டையன், ஈரோட்டின் ஒரு தொகுதியில் சத்யபாமா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விஜய் போட்டியிடும் தொகுதியை கடைசி நேரத்தில் அறிவிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு மட்டுமல்லாமல் மற்றொரு தொகுதியிலும் விஜய் போட்டியிடக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
-
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications