மகளிருக்கு ரூ.5,000 கொடுக்க ஆதி திராவிடர் துறை நிதி எடுக்கப்பட்டதா – தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசு 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகை என மகளிருக்கு ரூ.5,000 செலுத்தப்பட்டுள்ளது. அரசு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை மாற்றி மகளிர் உரிமைத் தொகைக்கு பயன்படுத்தியதாக புகார்கள் வைக்கப்பட்டன. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு நீண்ட விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சில ஊடகங்களில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தின் கீழ் 15.5,000 வழங்குவதற்காக மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றதாகும் என்பதை அரசு தெளிவுபடுத்துகிறது.

நிதி மாற்றி பயன்படுத்தவில்லை
முதலில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த நிதியும் வேறு திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தப்படவில்லை. அரசின் வரவு-செலவுத் திட்ட முறையின் படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த நிதிக்குள் 'பொது', 'ஆதி திராவிடர்', 'பழங்குடியினர்' OT GOT தனித்தனி கணக்கு தலைப்புகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நடைமுறை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்பட தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் போன்ற அனைத்து தனிநபர் பயனாளி சார்ந்த திட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, அந்த சமூக பயனாளிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
அது வேறு.. இது வேறு..
அந்த நிதியை வேறு சமூகங்களுக்கோ அல்லது வேறு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. இது அரசின் நிலையான நிதி ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு, KMUT திட்டத்திற்கும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, KMUT திட்டத்தின் கீழ் ரூ.5.000 வழங்குவதற்கான கூடுதல் செலவு. இத்திட்டத்திற்கான தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே உள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் திட்டங்களுக்கான நிதியில் இருந்து எடுக்கப்படவில்லை. எனவே, நிதி மாற்றம் (Diversion) நடந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது. மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியை பாதுகாக்க அரசு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளது. அந்தச் சட்டத்தின் படி, இந்த சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதரமாற்ற குற்றச்சாட்டு
ஒரு நிதியாண்டில் பயன்படுத்தப்படாத தொகை இருந்தாலும், அது பொதுநிதியாக மாறாது. அடுத்த நிதியாண்டில் அதே நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுமையாக ஆதாரமற்றது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளையும் நிதி ஒழுங்கையும் கடைப்பிடித்து, உரிய நிதி உரிய பயனாளிகளுக்கே சென்றடைவதை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. எனவே, எந்த ஒரு திட்டத்துக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கான தனித் தலைப்பில் ஒதுக்கப்படும் நிதியை ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களில் இருந்து மாற்றி தருவதாக கூறுவது முற்றிலும் தவறானதாகும் " என்று கூறியுள்ளனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications