Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி.ஆர்.பி.ராஜா நினைத்தால் அவரே இதை செய்யலாமே! சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நினைத்தால் அவரே மன்னார்குடியில் புதிதாக விவசாயக் கல்லூரியை தொடங்கலாமே என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

புதிய விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்.

இதேபோல் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தங்களை பொறுத்தவரை நிலம் தான் ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் கேள்வி

சட்டசபையில் கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதியில் புதிய விவசாயக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாமே எனக் கூறியதுடன் அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அரசுக்கு நற்பெயர்

அரசுக்கு நற்பெயர்

மேலும், விவசாயிகள் மத்தியில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நற்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகவும் கூறினார். புதிய விவசாயக் கல்லூரி அமைக்கக்கூடாது என்பது அரசின் நோக்கமல்ல என்றும் நிலம் தான் பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

110 ஏக்கர் நிலம்

110 ஏக்கர் நிலம்

ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கம் 600 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நம்மாழ்வார் பெயரில்

நம்மாழ்வார் பெயரில்


இதனிடையே தமிழக அரசு சார்பில் புதிய விவசாயக் கல்லூரி அமைக்கப்பட்டால் அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகத்தை டெல்டா பகுதியில் அமைக்கவேண்டும் எனவும் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை விடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+