ஹிட்லரையும் மிஞ்சிய டிரம்ப்? வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எல்லாரும் இணையணும்: பழ.நெடுமாறன்
சென்னை: உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து டிரம்பின் வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நிலவி வரும் அச்சமான சூழலுக்கு எதிராக செயல்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் சில முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்
இதற்கு பதிலடியாக ஈரான், ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையில், அலி காமேனியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு முன்பே தான் அவர்களைக் கொன்றதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்... எனவே உலக நாடுகள் இந்நிகழ்வுகளை உற்று கவனித்து வருகின்றன..
பழ நெடுமாறன்
இந்நிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மறைந்த பாசிசத் தலைவர் ஹிட்லரை விடவும் கொடிய குற்றவாளியாக டிரம்ப் திகழ்கிறார்.. அவர் உலகிற்கே பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளார்..
காமேனி படுகொலை
உக்ரைன் நாட்டு அதிபரை பொதுவெளியில் அவமதித்த டிரம்ப் முன்னதாக வெனிசுலா நாட்டின் மீது படையெடுத்து அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்.. வெனிசுலா நாட்டு அதிபர் மற்றும் அவரது துணைவியாரை கைது செய்து சிறையில் அடைத்து,சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்,. தற்போது ஈரான் மீது படையெடுத்து அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா அங்குள்ள உச்ச தலைவர் காமேனியைப் படுகொலை செய்துள்ளது..
அமெரிக்க அதிபர் டிரம்பின் இத்தகைய தொடர் ராணுவ அத்துமீறல்களால் உலகில் எந்தவொரு நாடும் இனி பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்சமான சூழல் உருவாகியுள்ளது.. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் டிரம்பின் இத்தகைய வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அனைத்து உலக நாடுகளுக்கும் உண்டு..
எனவே உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயல்பட முன்வர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications