தவெக நிர்வாகிகளுக்கு அவசர அழைப்பு.. நாளை மாலை விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுகவை தீவிரமாக எதிர்த்து தவெக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது. விஜய் பிப்ரவரி 13 ஆம் தேதி சேலம் செல்லவுள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் தவெக நிர்வாகிகளுடன் நாளை மாலை விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது.

சேலத்தில் விஜய்
இதுவரை இல்லாதளவுக்கு 4 முனை போட்டி நிலவி வருவதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுநாள் வரை திமுகவை மட்டும் விமர்சித்து வந்த தவெக மற்றும் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது.
மறுபக்கம் அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறது. தேர்தல் பணிகளில் தவெக சுணக்கமாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய் வருகிற 13 ஆம் தேதி சேலம் செல்லவுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊருக்கு விஜய் செல்வது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆலோசனை
இந்நிலையில் நாளை மாலை (10.02.26) 4 மணியளவில் காணொளி மூலம் தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசவுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 13 ஆம் தேதி விஜய் சேலம் செல்லவுள்ள நிலையில், அதுதொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிர்வாகிகள்
இதில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ், நிர்மல் குமார் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தலுக்காக பூத் கமிட்டி பணி, பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் இந்தக் கூட்டத்திலும் விஜய் நேரடியாக இல்லாமல், காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications