இதென்ன ட்விஸ்ட்டு?? அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் 10+1 சீட்டுக்கு ஒப்புக்கொண்ட தேமுதிக?
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைய இருப்பதாகவும், சீட் எண்ணிக்கை உறுதியாகிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை உறுதி செய்துவிட்டன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய பழைய கூட்டணியை திமுக தக்க வைத்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக மற்றும் சிறிய கட்சிகள் என அந்தக் கூட்டணியும் பலமாக உள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணிக்காக வலை வீசி வருகின்றன.
தேமுதிக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அவர்களின் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் அதில் கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக 2 கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. தேமுதிக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை கேட்பதால், திமுகவும், அதிமுகவும் ரொம்பவே யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், யாருடன் இந்த முறை கூட்டணி வைக்க வேண்டும் என எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சொல்கிறார்களோ அந்த கூட்டணியில்தான் இணைவோம். தேமுதிகவின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்தக் கூட்டணியை தேர்ந்தெடுப்போம் என்று கூறினார் பிரேமலதா.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைய இருப்பதாகவும், சீட் எண்ணிக்கை உறுதியாகிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இந்தக் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் பரபரக்கின்றன.
-
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!











Click it and Unblock the Notifications