வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்?
சென்னை: திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கண்டித்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அது போல் அவருக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், குன்ன் ராமசந்திரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர்.

இதையடுத்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசுகையில், அதிமுகவில் இணைக்காவிட்டால் விரைவில் கட்சியை தொடங்குவோம் என அறிவித்திருந்தார். அத்துடன் குறிப்பிட்ட தேதியை சொல்லி கெடுவும் விதித்திருந்தார்.
ஆனால் கெடு முடிந்தும் ஓபிஎஸ் எந்த கட்சியையும் தொடங்கவில்லை. சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து பேசிய நிலையிலும் ஓபிஎஸ் எந்த முன்னெடுப்பையும் எடுக்காமல் இருந்தார். அவரது நடவடிக்கை கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்தச மனோஜ் பாண்டியன், இனியும் ஓபிஎஸ்ஸுடன் பயணித்தால் அரசியல் வாழ்க்கை சூனியமாகிவிடும் என கருதி திமுகவில் இணைந்தார். அப்போதும் ஓபிஎஸ் விழித்துக் கொள்ளவில்லை. இதனால் அவரது ரைட் ஹேண்ட்டாக இருந்த வைத்திலிங்கமும் திமுகவில் ஐக்கியமானார்.
ஆனாலும் ஓபிஎஸ் அசரவில்லை. குன்னம் ராமசந்திரன் திமுகவில் இணைவதாக சொல்லிவிட்டு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் அரசியலை விட்டே விலகுகிறேன் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ், என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கடைசி பஸ்ஸில் ஊருக்கு செல்வதை போல் ஓபிஎஸ், இறுதியாக போய் திமுகவில் இணைந்துவிட்டார்.
இதனால் அவரது அதிமுக ஒருங்கிணைப்பு, தொண்டர் உரிமை மீட்பு, தர்மயுத்தம் உள்ளிட்டவை கேள்விக்குறியானது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. திமுகவுக்கு சென்றவர்கள் எல்லாம் வரும் தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற எண்ணத்துடன்தான் அங்கு சென்றனர்.
ஆனால் வைத்திலிங்கத்திற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை திமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், உதயநிதியின் தீவிர ஆதரவாளரான டாக்டர் நரேந்திரனுக்குத்தான் ஒரத்தநாடு தொகுதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கிறார்கள்.
இந்த தகவல் வைத்திலிங்கத்திற்கு தெரிந்து அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக வைத்திலிங்கம் இரு முறை இருந்துள்ளார். இந்த நிலையில் நரேந்திரன் என்ற மருத்துவருக்கு இந்த முறை ஒரத்தநாடு தொகுதி ஒதுக்கப்படும் என்கிறார்கள்.
இந்த நரேந்திரன் திமுக நிர்வாகி சந்திரசேகரனின் மகன் என்கிறார்கள். அவரது தந்தை அந்த தொகுதிக்கு ஆற்றிய பணிகளை கருத்தில் கொண்டு நரேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள். எல்லாவற்றையும் விட உதயநிதியின் ஆதரவாளராக நரேந்திரன் உள்ளார். இந்த முறை திமுகவில் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுகவுக்கு வந்த வைத்திலிங்கத்தை போல் ஏற்கெனவே திமுகவில் இருப்போரும் சீட் கிடைக்குமா என்ற கவலையில் உள்ளனர். மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் பலர் இணைந்துள்ளதால் தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications