இதை நோட் பண்ணீங்களா.. "ஈரோடு கிழக்கில் வெல்ல ஒரே வழி இதுதான்.." டிடிவி தினகரன் சொல்லும் பக்கா பிளான்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில் அமமுக நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏகவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது. இது தவிர அங்குப் பல முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
அமமுக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.. இந்தக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், "எம்ஜிஆரை திமுகவினரும் குறை கூற மாட்டார்கள். கருணாநிதி முதலில் ஆட்சி அமைக்க உதவியவரே எம்ஜிஆர் தான். இது அனைவருக்கும் தெரியும்.

எம்ஜிஆர்
எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால் இத்தனை மென்பொறியாளர்கள் நிச்சயம் உருவாகியிருக்க மாட்டார்கள். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பல தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதுவே ஐடி துறையில் தமிழர்கள் சிறந்து விளக்கிக் கோலோச்ச வாய்ப்பாக அமைந்தது.. எம்ஜிஆர் மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தார். அவர் எதைச் செய்யவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த பொதுக்கூட்டத்தில் விரிவாகச் சொல்கிறேன்.

இட ஒதுக்கீடு
திமுகவினர் வெறும் வார்த்தை வார்த்தை சமூக நிதி என்று சொன்னாலும் கூட மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இப்போது 69 சதவீதமாக இட ஒதுக்கீடு இருக்க அதிமுகவே காரணம்.இப்போது அதிமுகவில் எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் செய்யும் செயல்கள் டெல்லி வரை சென்று நிற்கிறது.. எம்ஜிஆர் கஷ்டப்பட்டு உருவாக்கிய இயக்கம் இப்போது குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கித் தவித்து வருகிறது.

எடப்பாடி ஒரு துரோகி
எடப்பாடி பழனிச்சாமியை ஒரு துரோகி.. அவரை நம்பி முதல்வராக்கியவர்களையே அவர் ஏமாற்றிவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்ன தான் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துப் பார்க்கலாம்.. இந்தத் தேர்தலில் வெல்வது முக்கியம்.. திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சவால்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நான் ஜெயலலிதாவின் அனைத்து தொண்டர்களையும் பார்த்துத் தான் சொல்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் தேர்தலில் வெல்ல முடியும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்.. சவாலுக்குத் தயாராக இருங்கள்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications