சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உஷார்.. உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்.. இதோ முழு லிஸ்ட்.. உங்களுடையது இருக்கிறதா?

Google Oneindia Tamil News

சென்னை: உலகில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் என்ன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதில் உங்களின் பாஸ்வேர்ட் உள்ளதா?.. இருக்கிறது என்றால் உடனே மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால் ஹேக்கர்கள் எளிதில் ஹேக் செய்து தகவல்களை திருடலாம் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மறதி.. ஒரு உலக வியாதி.. இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மறதியால் சிரமத்தை சந்திப்பது உண்டு.

குறிப்பாக தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் ஒவ்வொருவரும் பணி நிமித்தமாகவும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஏற்ப இ-மெயில் தொடங்கி செல்போன் செயலி வரை அனைத்து சமூக வலைதள பக்கங்களுக்கும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி வருகிறோம்.

 அடேங்கப்பா.. பொன்னியின் செல்வனை மிஞ்சும் பிரம்மாண்டம்! நவராத்திரிக்கு ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள் அடேங்கப்பா.. பொன்னியின் செல்வனை மிஞ்சும் பிரம்மாண்டம்! நவராத்திரிக்கு ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள்

பாஸ்வேர்ட் பயன்பாடு

பாஸ்வேர்ட் பயன்பாடு

நமது தனிப்பட்ட விபரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வதை தவிர்க்கும் வகையில் பாஸ்வேர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாஸ்வேர்ட் பயன்படுத்துவது என்பது பாதுகாப்பானது தான். இருப்பினும் பாஸ்வேர்ட்டை மறக்காமல் நினைவில் வைத்து கொள்வது என்பது இன்றும் பலருக்குமு் சவாலான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் ஏராளமான மக்கள் தங்களின் பாஸ்வேர்ட்டுகளை அடிக்கடி மறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எளிமையான பாஸ்வேர்ட்

எளிமையான பாஸ்வேர்ட்

இத்தகைய சிரமத்தில் இருந்து விடுபட பலரும் மிகவும் எளிமையான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகின்றனர். நீங்கள் நினைவில் வைத்து கொள்ள இந்த பாஸ்வேர்ட்டுகள் மிகவும் எளிதானதாக இருக்கும் அதேவேளையில் உங்களது எளிமையான பாஸ்வேர்டை கண்டறிந்து விபரங்களை திருடுவது என்பது ஹேக்கர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். இதனால் தான் ஹேக்கர்கள் அறிந்து கொள்ளாத வகையில் அதேநேரத்தில் எளிமையாக நினைவில் வைத்து கொள்ளும் வகையில் பாஸ்வேர்ட்டை பயன்படுத்த வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெளியான ஆய்வு முடிவு

வெளியான ஆய்வு முடிவு

இருப்பினும் கூட பலரும் எளிமையாக நினைவில் நிற்கும் பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தான் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்டுகள் என்ன என்பது தொடர்பாக Nordpass எனும் பாஸ்வேர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை செய்தது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதிகமாக பயன்படுத்தும் பாஸ்வேர்ட்

அதிகமாக பயன்படுத்தும் பாஸ்வேர்ட்

அதன்படி உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்டாக ‛123456' உள்ளது. இன்றும் கூட கோடிக்கணக்கானவர்கள் இந்த பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் ‛123456789' என்ற பாஸ்வேர்ட்டும், 3வது இடத்தில் ‛12345' என்ற பார்வேர்ட்டும் உள்ளது. 4வது இடத்தில் 'Qwerty' என்ற பாஸ்வேர்ட்டும், 5வது இடத்தில் ‛password' என்பதையே பாஸ்வேர்ட்டாக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 6வது இடத்தில் ‛111111' என்ற வார்த்தையும் உள்ளது

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

இத்தகைய பாஸ்வேர்ட்டுகளை ஹேக்கர்கள் ஒரு வினாடியில் கண்டறியந்து ஹேக் செய்து விபரங்களை கண்டுப்பிடிக்க முடியும் என அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர, 'ABCDEF', 'iloveyou', பணி செய்யும் நிறுவனங்களின் பெயர்கள், பிறந்த தேதி, பயன்படுத்தும் வாகன எண்கள், பிறந்த தேதி உள்ளிட்டவற்றையும் இன்று வரை ஏராளாமனவர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் நமக்கு தெரியாமல் ஹேக் செய்ய முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

English summary
what kind password is used by most people in the world has been released. Does it contain your password?.. If yes, change it immediately. Otherwise, hackers can easily hack and steal information, warn tech experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X