வெள்ளியை வைத்தே ஸ்கோர் செய்த ஓபிஎஸ்! ஷாக் இபிஎஸ்! கவசத்தை செய்து கொடுத்தது இவரா? மாஸ் காட்டிய வாரிசு
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் அணிவித்ததற்கு இணையாக தற்போது ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கவசம் தந்திருப்பது தென் மாவட்டங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் இதனை செய்தது யார் இதற்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது குறித்தான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
அதிமுகவில் அதிகார மோதலில் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருந்தனர் அதிமுகவின் ஒரு தரப்பினரும்..
ஆனால் நீதிமன்ற தீர்ப்பு இரு தரப்பிற்குமே சாதகமாக வராத நிலையில் எடப்பாடியும் ஒதுங்கிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட மாஜிக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளிக் கவசம்
ஆனால் அதிமுகவின் பொருளாளரும் ஒருங்கிணைப்பாளரும் தான் எனக் கூறிவரும் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவு பட்டாளத்தோடு பசும்பொன்னில் மாஸ் காட்டினார். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வருடத்தின் அனைத்து சுப நாட்களிலும் அணிவிக்கும் வகையில் வெள்ளி கவசத்தையும் வெள்ளி ருத்திராட்ச மாலையும் வழங்கினர். இதனால் எடப்பாடி தரப்பினரே கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கவசம் செய்து கொடுத்தது யார் அதற்குப் பின்னணியில் மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கவசம் செய்யும் பணியில் ஈடுபட்டது ஓபிஎஸ் இன் மகனான ஜெயபிரதீப் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஜெய பிரதீப்
வெள்ளிக் கவசத்துடன் ஓ.பன்னீர் செல்வமும் ரவீந்திரநாத் குமார் எம்பியும் உற்சாகமாக போஸ் கொடுத்த நிலையில் அதனை செய்து கொடுத்த ஜெயப்பிரதீப் தனியே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளிக்கவசம் உருவானது எப்படி அதனை செய்தது யார்? என்பது குறித்து ஜெயப்பிரதீப்பே கூறியிருக்கிறார். இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில்," மனிதனை ஒழுக்கத்தால் மட்டுமே உயர்ந்தவர் என்று மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதி மற்றும் பணத்தால் அல்ல" என்று குரல் கொடுத்து வாழ்ந்து காட்டிய பசும்பொன் சித்தர் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர்.

ஓ.பன்னீர்செல்வம்
அவர்களின் 60-வது குருபூஜை நாளான இன்று மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கும் பொருட்டு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட காப்பாளர் திருமதி ந.காந்திமீனாள் அம்மையார் அவர்களிடம் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.

பாராட்டு
தேசியத்தலைவர் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் வெள்ளிக் கவசம் மிக நேர்த்தியாக சிறப்பாக உருவாக வேண்டுமென பாக்கியம் வாய்ந்த அப்பணியை எனக்கு வழங்கிய உயர்திரு ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, வெள்ளிக்கவசம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த தேவர் ஆலய நிர்வாக பொறுப்பாளர்களுக்கும், மிக அழகாக கவசத்தை உருவாக்கிய ஸ்தபதி அவர்களுக்கும், வெள்ளி கவசம் உருவாவதற்கு என்னோடு பயணித்து முழு உழைப்பை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். " என கூறியிருக்கிறார். இதன் மூலம் அப்பணியை ரகசியமாக மட்டுமல்லாது சிறப்பாகவும் செய்ததற்கு அவரை பாராட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications