Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை கமிஷனராக இருந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாற்றப்பட்டார். யார் இவர் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். 1992 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர், தற்போது பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்து வந்தார்.

Sandeep Rai Rathore

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருந்தார். இவர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம் செய்ய 9 அதிகாரிகளின் பெயர் பட்டியலை தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பியிருந்தது.

டிஜிபியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பொறுப்பில் இருப்பது போன்ற அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதாவது ஓய்வு பெற 6 மாதங்கள் இருக்கும் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறகு மீண்டும் அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அதிகாரிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி தமிழக அரசு சில அதிகாரிகளின் பட்டியலை கொடுத்திருந்தது. இதனிடையே தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது. இது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

போலீஸ் நிர்வாகத்தை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக நிரந்தர டிஜிபியை தாமதப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வரை சென்றது.

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் 3 வாரங்களுக்குள் நிரந்தர டிஜிபி நியமனத்தை முடிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை தமிழகத்தின் நிரந்தர டிஜிபியாக நியமித்தது.

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர் என்பதை பார்க்கலாம். கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை காவல் துறை ஆணையராக இருந்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சதி என மூன்று முறை உளவுத் துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல் உண்மையில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக காவல் துறைக்கு எந்த புலனாய்வு அமைப்புகளிடமிருந்தும் எந்த உளவுத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

இந்த கொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. மேலும் போலீஸார் கைது செய்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உள்துறை முதன்மை செயலாளராக இருந்த அமுதா, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அப்போது அவர் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் அருண் புதிய ஆணையராக பதவியேற்றார்.

சந்தீப் ராய் ரத்தோர் 1992ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவையில் துணை கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.

அதன் பிறகு சென்னை மாநகர துணை ஆணையராக பதவி வகித்த போது பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்இடி சிக்னல் விளக்குகளை அறிமுகம் செய்து வைத்தார்.

2003 ஆம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றிய போது முத்திரைத்தாள் மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் முக்கியப் பங்காற்றினார்.

2005 இல் தூத்துக்குடி எஸ்பியாகவும் 2010ஆம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜியாகவும் 2014 இல் கடலோர பாதுகாப்பு ஐஜியாகவும், 2019இல் தமிழக சீருடை தேர்வாணையத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற சந்தீப் , ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் இயக்குநராகவும் இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+