சூப்பர்! கேஸ் சிலிண்டர் விடுங்க, தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்டவ் தரும் நன்மை.. கரண்ட் பில் உயருமா?
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளுக்கு டிமாண்டு எகிறி வருகிறது.. இந்த மின் அடுப்புகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? கேஸ் சிலிண்டரை விட மின் அடுப்புகளை பயன்படுத்துவது எளிதானதா? மின் கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளதா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 'சேப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கட்' போன்ற முன்னணி ஆன்லைன் டெலிவரி செயலிகளில் மின்சார அடுப்புகளின் இருப்பு மிக வேகமாகத் தீர்ந்து வருகின்றன.. ஆன்லைனில் ஆர்டர் செய்ய முயலும் வாடிக்கையாளர்கள் பலருக்கு ஸ்டாக் இல்லை என்ற செய்தியே கிடைக்கிறது..

எலக்ட்ரிக் ஸ்டவ் பயன்பாடு
சென்னையில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், ஒருவேளை உணவகங்கள் மூடப்பட்டால் சமையல் செய்ய சிக்கல் ஏற்படும் என்பதால் இப்போதே மின் அடுப்புகளை வாங்கி சேமிக்க தொடங்கி விட்டார்களாம்.. சில்லறை விற்பனை கடைகளிலும் ஒரு நாளைக்கு ஐந்து அடுப்புகள் விற்ற இடத்தில், இப்போது அதன் விற்பனை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்..
மின் அடுப்புகளை பயன்படுத்துவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன.. இதில் சமைக்கும்போது வெப்பம் வீணாகாமல் நேரடியாக பாத்திரத்திற்கு செல்வதால் சமையல் மிக விரைவாக முடியும்.. மேலும், கேஸ் கசிவு போன்ற விபத்து அபாயங்கள் இதில் இல்லை என்பது பெரிய பிளஸ் பாயிண்ட்.. நவீன வசதிகளுடன் வரும் இந்த இண்டக்ஷன் ஸ்டவ் அடுப்புகளில் நேரத்தைக் கட்டுப்படுத்தும் டைமர் வசதி இருப்பதால் பால் பொங்குவது போன்ற கவலைகள் எதுவும் இல்லாமல் சமைக்கலாம்.. பராமரிப்பதும் மிகவும் எளிது..
மின்சார அடுப்புகள்
இருந்தாலும்,. சில பாதகங்களும் இதில் இருக்கவே செய்கின்றன.. இண்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு பிரத்யேகமான இண்டக்ஷன் பேஸ் கொண்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்படும்.. சாதாரண அலுமினிய பாத்திரங்களை இதில் பயன்படுத்த முடியாது..
அதுவும் இல்லாமல், மின்சார கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது.. மின் தடை ஏற்படும் நேரங்களில் இந்த அடுப்புகளை பயன்படுத்த முடியாது என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.. கிராமப்புறங்களில் மின்வெட்டு அதிகமாக இருந்தால் இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகிவிடும்..
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் மக்கள் பீதியடைந்து ஒரே நேரத்தில் கடைகளில் குவிவது தேவையற்றது.. இது சந்தையில் செயற்கையான விலையேற்றத்திற்கே வழிவகுக்கும்..
எனவே அரசு தரப்பில் சிலிண்டர் இருப்பு குறித்து முறையான விளக்கம் அளித்தால் மட்டுமே இந்தப் பதற்றம் குறையும்.. அதேநேரம், பேரிடர் காலங்களில் அல்லது இது போன்ற தட்டுப்பாட்டு நேரங்களில் எலக்ட்ரிக் அடுப்பு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. நுகர்வோர் மின் அடுப்புகளை வாங்கும்போது தரமான ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற சாதனங்களை வாங்கிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியமாகும்..
யூனிட் கரண்ட் பில்
சாதாரணமாக ஒரு இண்டக்ஷன் ஸ்டவ் 1,200 வாட்ஸ் முதல் 2,000 வாட்ஸ் வரை மின்சாரத்தை பயன்படுத்தும்.. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மணிநேரம் இந்த மின் அடுப்பை தொடர்ந்து பயன்படுத்தினால், தோராயமாக 1.5 யூனிட் முதல் 2 யூனிட் வரை மின்சாரம் செலவாகும்.. மாதத்திற்கு என்று கணக்கிட்டால் 45 முதல் 60 யூனிட்டுகள் வரை கூடுதலாக வர வாய்ப்புள்ளது..
தமிழகத்தின் மின்சாரக் கட்டண அடுக்குகளை பொறுத்து, நீங்கள் ஏற்கனவே அதிக யூனிட்கள் பயன்படுத்துபவர் என்றால், இந்த கூடுதல் யூனிட்டுகள் உங்கள் மொத்த பில்லை சற்று உயர்த்தவே செய்யும்..
இருந்தாலும், கேஸ் சிலிண்டர் விலையோடு ஒப்பிடும்போது மின்சார அடுப்பு சிக்கனமானது என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.. காரணம், மின் அடுப்பில் வெப்பம் வீணாகாமல் நேரடியாகப் பாத்திரத்திற்குச் செல்வதால் சமையல் மிக விரைவாக முடிந்துவிடும்.. ஒரு லிட்டர் தண்ணீரை மின் அடுப்பில் கொதிக்க வைக்க 3 முதல் 4 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இது கேஸ் அடுப்பை விட வேகமானது.. இதனால் நேரம் மிச்சமாவதுடன், ஆற்றலும் சேமிக்கப்படுகிறது..
மக்கள் எடுத்த ரிஸ்க்
மின்சாரக் கட்டணத்தை குறைக்க சில எளிய முறைகளைக் கையாளலாம்.. சமைப்பதற்கு முன்பே காய்கறிகளை நறுக்கித் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.. இண்டக்ஷன் ஸ்டவ் ஆன் செய்த பிறகு காய்கறி நறுக்கினால் தேவையற்ற மின் விரயம் ஏற்படும்.. அதேபோல், தட்டையான அடிப்பாகம் கொண்ட சரியான இண்டக்ஷன் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் வெப்பம் சீராகப் பரவி மின் நுகர்வை குறைக்கும்..
சுருக்கமாகச் சொன்னால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அல்லது அதன் விலை உயரும்போது, மின்சார அடுப்பு ஒரு லாபகரமான மாற்றாகவே இருக்கும்.. ஆனால், பழைய மாடல் மின் அடுப்புகளை தவிர்த்து, நவீன பவர் சேவிங் டெக்னாலஜி கொண்ட அடுப்புகளை தேர்ந்தெடுப்பது உங்கள் மின்சாரப் பில்லைக் கட்டுக்குள் வைக்க உதவும்..!!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications